கார்த்திக்-கு அந்தப் படம் சுத்தமா பிடிக்கல! ஆனா பேயோட்டம் ஓடுச்சே.. என்ன காரணம் தெரியுமா?

Published on: June 8, 2024
karthick
---Advertisement---

Actor Karthick: 90கள் காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் அந்த படத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து இளம் பெண்களை கொள்ளை கொண்ட நடிகராக மாறினார்.

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தொடர்ந்து பல தோல்விகளையே கண்டு வந்தார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அந்தப் படத்தில் வெறும் 20 நிமிடமே தோன்றினாலும் படம் முழுக்க வந்த ஒரு ஃபீலிங்கை ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார் கார்த்திக்.

இதையும் படிங்க: அந்த சீனுக்கு மியூசிக் போடாதீங்க..! இளையராஜாவின் கையைப் பிடித்து நிறுத்திய இயக்குனர்… !

அதில் மிஸ்டர் சந்திரமௌலி என அவர் கூறிய ஒரே ஒரு வசனம் இன்றளவும் அவருக்கு ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அதன் பிறகு அக்னி நட்சத்திரம் படம் மிகப்பெரிய அளவில் பேரை பெற்றுக் கொடுத்தது. இப்படி தொடர்ந்து நடித்து வந்த கார்த்திக் 90 களின் இறுதியில் சென்டிமென்ட் கலந்த குடும்ப பாங்கான படங்களில் ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலமும் மக்களை கவர்ந்து வந்தார் .

அதில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் என்னவென்றால் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் .அந்த படத்தில் நடிக்கும் போது கார்த்திக் பிடிக்காமல் தான் நடித்தாராம். அந்தப் படமே சுத்தமாக கார்த்திக்கு பிடிக்கவே இல்லையாம். ஏனெனில் அதற்கு முன்புதான் நந்தவனத்தேரு என்ற படத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு கதைகளும் ஒரே மாதிரியாக கார்த்திக்கு தோன்றியதால் கண்டிப்பாக இந்தப் படம் ஊத்திக்கும் என நினைத்துக் கொண்டே தான் நடித்தாராம்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி ஆசைப்பட்டதுக்கு செலவு ஒரு கோடி!.. தயாரிப்பாளர் கிடைச்சா தலையில மிளகாதான்!..

இதை ரமேஷ் கண்ணாவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம் கார்த்திக். ‘ நீயாவது சொல்லுயா இயக்குனர் கிட்ட. படம் கண்டிப்பா ஓடவே ஓடாது’ என சொல்லிக்கொண்டே இருப்பாராம். படத்தின் இயக்குனர் விக்ரமன் ரமேஷ் கண்ணாவிடம் ‘ அவருக்கு என்னதான் பிரச்சனை’ என கேட்க அதற்கு ரமேஷ் கண்ணா இவர் சொன்ன விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும் விக்ரமன்  ‘அவர் சொன்னால் சொல்லிட்டு போகட்டும். நாம் நம் வேலையை பார்ப்போம்’ என எப்படியோ படத்தை முடித்து ரிலீசுக்கும் தள்ளிவிட்டார். ஆனால் படத்தின் ஹிட் இதுவரை கார்த்திக் கெரியரிலேயே இல்லாத ஒரு பெரிய ஹிட் படமாக மாறி பேய் ஓட்டம் ஓடி மிகவும் சாதனை படைத்த படமாக மாறியது.

இதையும் படிங்க: ’ஹரா’வா இதுக்கு விஜய்யோட ‘சுறா’வே தேவலாம்!.. முடிச்சிவிட்டாய்ங்க!.. மோகன் பட விமர்சனம் இதோ!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.