டேஷா போச்சு… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்… இரண்டாம் மனைவி போட்ட வைரல் பதிவு!...

by Akhilan |
டேஷா போச்சு… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்…  இரண்டாம் மனைவி போட்ட வைரல் பதிவு!...
X

Suchitra: பாடகி சுசித்ரா கொடுத்து வரும் பேட்டியால் கோலிவுட் தொடர் பரபரப்பில் இருக்கிறது. இந்த பேட்டியில் அவர் பெரிதாக அவருடைய முதல் கணவர் கார்த்திக்கை அதிகளவில் சாடி இருப்பதால் அவருடைய இரண்டாவது மனைவி எப்படி ரியாக்ட் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சில பாடல்களை பாடி நல்ல வரவேற்பை பெற்றவர் பாடகி சுசித்ரா. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் அவருடைய டிவிட்டர் கணக்கிலிருந்து நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் சரமாரியாக வெளியானது. இதனை ரசிகர்கள் சுச்சி லீக்ஸ் என கலாய்த்தனர்.

இதையும் படிங்க: சிவாஜி எந்த இயக்குனரின் காலில் விழுந்து வணங்கினார் தெரியுமா? பராசக்தி நாடகத்துல நடிச்ச ஹீரோயின் இவரா..?!

இதில் நடிகர் கார்த்திக் குமார் தன்னுடைய 16 வயது இளையவரான நடிகை அம்ருதா ஸ்ரீநினிவாசனை கல்யாணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து தற்போது பாடகி சுசித்ரா பேட்டிகளில் மூலம் மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அவர் தன்னுடைய முதல் கணவர் கார்த்திக் ஒரு ஹோமோசெக்‌ஷுவல் எனக் குறிப்பிட்டார். அவர் நடிகர் தனுஷுடன் ரூமில் என்ன செய்தார் தெரியுமா? திரிஷா அப்படி, கமல் வீட்டு பார்ட்டியில் என்ன நடக்கும் தெரியுமா என சில விஷயங்களை அப்பட்டமாக உடைத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாதான் ஃபர்ஸ்ட்!.. எம்.ஜி.ஆர் செய்த வேலை!. கோபத்தில் வெளியேறிய நடிகை!…

இது கோலிவுட்டில் பெரிய அளவில் வைரலானது. சுசித்ராவின் இந்த கருத்துக்கு கார்த்திக் குமார் ஹோமோ செக்ஸுவல் ஆக இருந்தால் அதை பெருமையாக சொல்லிக் கொள்வேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார். இது மட்டுமில்லாமல் சுசித்ரா தன்னுடைய பேட்டியில் கார்த்திக் அவருடைய இரண்டாவது மனைவி அமிர்தாவையும் ஏமாற்றிய கல்யாணம் செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் இதற்கு அமிர்தா எப்படி பதில் சொல்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில், விவாதம் செய்வதற்கு வாழ்க்கை ரொம்பவே சின்னது. அதற்கு பதில் மயிரா போச்சுன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும் என தன்னுடைய கணவர் கார்த்திகை டேக் செய்திருக்கிறார். இவர்கள் இருவரை தவிர சுசித்ரா குறிப்பிட்ட மற்ற எந்த பிரபலங்களும் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story