Retro: சூர்யாவுக்காக கார்த்திக் சுப்பராஜ் செய்யப் போகும் சம்பவம்.. களைகட்டப் போகும் ஆடியோ லாஞ்ச்

retro
Retro: முதன் முறையாக சேர்ந்த கூட்டணி என்றாலும் ஒரு மாஸ் கூட்டணி என்றே சொல்லலாம். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா காம்போவில் உருவாகியிருக்கிறது ரெட்ரோ திரைப்படம். இந்தப் படத்தில் முதன் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்ட்டே நடித்திருக்கிறார். இவர்களுடைய கெமிஸ்ட்ரி வெளியான போஸ்டரிலேயே அற்புதமாக தெரிகிறது. குறிப்பாக சூர்யா மற்றும் எந்த நடிகைகள் என்றாலும் ரொமான்ஸுக்கு பேர் போனவர் சூர்யா.
அது அவருடைய கண்களே வெளிப்படுத்திவிடும். அதனால் எல்லா ஹீரோயின்களுடனும் எளிதாக சூர்யாவின் கேரக்டர் செட்டாகிவிடும். அப்படித்தான் பூஜா ஹெக்டேவுடனும் சூர்யாவின் கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாக இருக்கிறது. படத்தின் முதல் , இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் கூட விகடன் பேட்டியில் ரெட்ரோ திரைப்படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். ஆனால் ரெட்ரோ கண்டிப்பாக கேங்க்ஸர் திரைப்படம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் ஆக்ஷன் , எமோஷனல், செண்டிமெண்ட் என எல்லாமே கலந்த கலவையாகத்தான் இருக்க போகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
கங்குவா படத்திற்கு பிறகு வெளியாகும் திரைப்படம் ரெட்ரோ என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சூர்யா ஒரு பக்கம் இருந்தாலும் கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து ஒரு தரமான படத்தைத்தான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடப்பதாக கூறப்பட்டது.

ஆனால் நேரு ஸ்டேடியத்தில்தான் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம். பல திரைப்பிரபலங்கள் இந்த விழாவிற்கு வருகை தர இருக்கின்றனர். இதில் குறிப்பாக ரஜினிக்கு அழைப்பு விடுக்கவும் இருக்கிறதாம். கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் தீவிர வெறியன் என்பதால் கண்டிப்பாக அவருக்கு அழைப்பு போகும். அதுமட்டுமில்லாமல் விழாவில் ரஜினி வந்து சூர்யாவை பற்றி பல விஷயங்களை பேசி அதன் மூலம் படத்திற்கு ஒரு பிளஸாக கூட இருக்கலாம் என்ற காரணத்தினால் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை அழைக்க செல்வார் என்று சொல்லப்படுகிறது.