உன்கூட ஊர் சுத்துவேன்..ஆனா நடிக்க மாட்டேன்!...நடிகையிடம் சீன் போட்ட கார்த்திக்...
நவரச நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு ப்ளே பாய் என்றே சொல்லலாம். அத்தனை நடிகைகளையும் தன் குறும்புத்தனத்தால் ஈர்த்தவர், ஒரு சில நடிகைகள் இவர் மேல் காதல் வையப்பட்டும் உள்ளனர். இவருக்கும் ஒரு சில நடிகைகளிடம் காதல் மலர்ந்துள்ளது.
திரையுலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகளிடம் ஜோடி சேர்ந்துள்ளார் கார்த்திக். மேலும் பல கிசுகிசுக்களுக்கும் ஆளானார். அதிலும் குறிப்பாக நடிகை சுலக்ஷனா கார்த்திக்குடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர். நடிகை சுலக்ஷனாவும் நான் நெருக்கமாக பழகிய நடிகர் கார்த்திக் தான் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சாப்பாட்டிலும் சமத்துவம் பார்த்த எம்.ஆர்.ராதா!..அம்மாவின் செய்கையால் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம்!..
இருவரும் அடிக்கடி வெளியே போவது என்று தாராளமாக சுற்றுவார்களாம். ஆனால் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்று சுலக்ஷனா கூறினார். இவர்களின் நெருக்கத்தை பார்த்த ஊடகம் அப்போது நிறைய கிசுகிசுக்களை எழுதியிருக்கின்றனர். மேலும் கார்த்திக்கும் அடிக்கடி சுலக்ஷனாவை அவரது ஆண் நண்பர் என்று தான் மற்றவர்களிடம் கூறுவாராம்.
இதையும் படிங்க : குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் அஜித்… எந்த படத்தில் தெரியுமா?
இரு ஆண் நண்பர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித் தான் சுலக்ஷனா இருந்திருக்கிறார். அதனாலேயே படத்தில் ஜோடியாக நடிக்கும் போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாதாம். இதனால் சுலக்ஷனாவிடம் கார்த்திக் இனி நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்றும் இயக்குனர்களிடமும் சுலக்ஷனா இனி என் கூட நடிக்க கூடாது என்று கூறிவிடுகிறேன் என்று அவரிடமே நேரடியாக சொல்லியிருக்கிறார். அதற்கும் சுலக்ஷனா மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதித்திருக்கிறார். அதிலிருந்து இருவரும் சேர்ந்து நடிக்க வில்லையாம்.