கார்த்திக் நடிக்க மறுத்த படம்!.. ஆனால் அவரின் கேரியரையே மாற்றிய படம்!.. நல்லவேளை மிஸ் பண்ணல…
தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த நடிகர்களில் கார்த்திக்கும் ஒருவர். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் இவர். இயக்குனர் பாரதிராஜாவின் கண்ணில் பட்டு ஹீரோவாக மாறியவர். அவர் இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி பல படங்களில் நடித்தார். இவருக்கென ரசிகர் கூட்டம் கூட இருந்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாகவும் இருந்தார்.
ஆனால், படப்பிடிப்புக்கு சரியாக செல்லாமல் தனது கேரியரை தொலைத்தவர் இவர். அதோடு அரசியலிலும் இறங்கி பெயரை கெடுத்து கொண்டார். சரி விஷயத்திற்கு வருவோம். எல்லா நடிகர்களுக்கும் ஏற்ற இறக்கம் என்பது உண்டு. தொடர் தோல்விகள் ஏற்பட்டு சில வருடங்கள் வாய்ப்புகள் இல்லாமல் போகும். 1981ம் ஆண்டுதான் கார்த்திக் சினிமாவில் நடிக்க துவங்கினார். 5 வருடங்கள் பல படங்களில் நடித்தார்.
அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லமால் போனது. அப்போதுதான் ஒரு புதிய இயக்குனர் அவரிடம் வந்து தான் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நீங்கள நடிக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், எனக்கு அது செட் ஆகாது. நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கறாராக மறுத்துள்ளார். ஆனால், அந்த இயக்குனர் அவரிடம் தொடர்ந்து பேசி அவரை சம்மதிக்க வைத்து அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
அந்த இயக்குனர் மணிரத்னம். கார்த்திக் நடித்த அந்த திரைப்படம் மௌன ராகம். 1986ம் ஆண்டு இப்படம் வெளியானது. அந்த படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் கார்த்திக்கின் துள்ளலான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. இன்னும் சொல்லப்போனால் இப்போதைய திரைப்படங்களில் கதாநாயகிகளிடம் ஹீரோக்கள் தடாலடியாக காதலை சொல்லும் காட்சிகளுக்கெல்லாம் அச்சாரமே மௌன ராகம் படத்தில் கார்த்திக் ஏற்ற அந்த வேடம்தான்.
மௌன ராகம் படத்தின் வெற்றி கார்த்திக்கு பல பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. அதன்பின் பிஸியான நடிகராக கார்த்திக் மாறினார். அதன்பின் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் மற்றும் இராவணன் ஆகிய படங்களில் கார்த்திக் நடித்தார். அதேபோல், கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கை கடல் திரைப்படம் மணிரத்னமே அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.