உங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் கிடையாது- மாப்பிள்ளை கோலத்தில் ஓடிவந்த கார்த்திக்கை ஏமாற்றிய சுந்தர் சி…

Karthik
சுந்தர் சி திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் நகைச்சுவை பகுதிகள் என்று தனியாக இருக்காது. கதையே நகைச்சுவையும் சென்டிமென்ட்டும் கலந்துதான் இருக்கும். இந்த நிலையில் அவர் கார்த்திக்கை வைத்து இயக்கிய ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்திருக்கிறது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான திரைப்படம் “உனக்காக எல்லாம் உனக்காக”. இத்திரைப்படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, விவேக் போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இயக்குனர் சுராஜ் கதை, வசனம் எழுதியிருந்தார்.
“உனக்காக எல்லாம் உனக்காக” திரைப்படம் ஒரு மிகச்சிறந்த காமெடி கலந்த சென்டிமென்ட் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமான காமெடி காட்சிகளாகும். இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான திரைப்படமாக அமைந்துள்ளது.

Sundar C
இந்த நிலையில் இத்திரைப்படம் உருவாகும்போது முதலில் கார்த்திக்கிற்கு இத்திரைப்படத்தின் கதையை கூறவேயில்லையாம். முதல் நாள் படப்பிடிப்பின்போது சுந்தர் சியை தொலைப்பேசியில் அழைத்த கார்த்திக், “இன்னைக்கு என்ன சீன் எடுக்கப்போறோம்?” என கேட்க, அதற்கு சுந்தர் சி, “இன்னைக்கு ஒரு கல்யாண சீன் எடுக்கப்போறோம்” என கூறியிருக்கிறார்.
உடனே கல்யாண மாப்பிள்ளை போல் உடையணிந்து படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டாராம் கார்த்திக். இதனை பார்த்த சுராஜ், “சார், இன்னைக்கு கல்யாண சீன் எடுக்கப்போறோம்ன்னுதான் சொன்னோம். ஆனா உங்களுக்கு கல்யாணம் கிடையாது” என கூறினார்களாம். இதை கேட்டதும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். உடனே கார்த்திக், “எனக்கு முதலில் கதையை கூறிவிடுங்கள்” என கூற, அப்போதுதான் கார்த்திக்கிற்கு அத்திரைப்படத்தின் முழு கதையையும் கூறினார்களாம். அந்த கதை கார்த்திக்கிற்கு பிடித்துப்போக, அதன் பிறகுதான் அத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வியின் இசையில் ஒரு போஸ்ட்மேன் தேர்ந்தெடுத்த மெட்டு! – சூப்பர் ஹிட் பாட்டாச்சே!