Connect with us
KARTHIK

Cinema News

குடியால் குடி மூழ்கி போன கார்த்திக் படம்- உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்!!

பல சினிமா பிரபலங்கள் மதுவுக்கு அடிமையாகி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்யுள்ளனர். குடிப்பழக்கத்தால் சம்பாதித்த பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் இழந்து நடுதெருவுக்கு வந்தவர்கள் ஏராளம். அப்படி ஒருவரின் மதுப்பழக்கத்தால், ஒரு படமே பாதியில் நின்றதை பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்திய பேட்டி ஒன்றி கூறியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் டி.சிவா, பூந்தோட்ட காவல்காரன், சொல்வதெல்லாம் உண்மை, தெய்வ வாக்கு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

karthik

மேலும் பல ஜீவா, பாயும் புலி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் தனியாக தயாரிக்க முயன்ற படம் ஒரே ஒரு நாள் அதுவும் வெறும் மூன்றே மணி நேர படப்பிடிப்பிலேயே பாதியில் நின்றுவிட்டதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக புலம்பியுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.  

kush1

khusbhoo1

தெய்வ வாக்கு, இது எங்கள் ராஜியம் படங்களை இயக்கிய எம்.எஸ்.மது  இந்த படத்தை இயக்கவிருந்ததாகவும், அந்த படத்தில் ஹீரோவாக கார்த்திக் மற்றும் ஹீரோயினாக குஷ்பு நடிக்கவிருந்தாகவும், அந்த படத்திற்கு பள்ளிக்கூடம் திறந்தாச்சி என்று பெயரிட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தில் இயக்குநர் மது, மதுவுக்கு அடிமையாகி நிதானமே இல்லாமல் இருந்ததாகவும், அவரது மனைவி எவ்வளவோ போராடியும் அவர் கேட்கவே இல்லையென்றும் இவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 1 மணி நேரம் கூட நிதானத்தில் இருக்க மாட்டார் என்றும் எல்லா நேரமும் போதையில் இருப்பார், அதனால் தான் அந்த படமே பாதில் நின்றது என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கிய பிறகு, நடிகர் கார்த்திக் படத்தின் கதையை கேட்டுள்ளார். ஆனால் இயக்குநர் மதுவால், தன் படத்திற்கு தான் எழுதிய கதையையே கூற முடியாத நிலையில் போதையில் இருந்துள்ளார்.

இதனால் கடுப்பான கார்த்திக் படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டாராம். இது பற்றி தயாரிப்பாளர் டி.சிவா கூறுகையில் இயக்குநர் மது காலையில் சரக்கடிப்பார், நடிகர் கார்த்திக் மாலையில்  சரக்கடிப்பார். இதனால் அந்த படத்தை எடுத்து முடிக்கமுடியாமல் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது என்று அந்த பேட்டியில்  புலம்பியுள்ளார் டி.சிவா.

google news
Continue Reading

More in Cinema News

To Top