ஒரு போன் கால் தான் வந்துச்சி.! வெலவெலத்து போய்ட்டாராம் அருண் விஜய்.! 'மாறன்' எபெக்ட்ஸ்..,

by Manikandan |
ஒரு போன் கால் தான் வந்துச்சி.! வெலவெலத்து போய்ட்டாராம் அருண் விஜய்.! மாறன் எபெக்ட்ஸ்..,
X

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் திரைக்கதையில் புதுமை புகுத்தி ரசிகர்களைமுதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அதன் பிறகு கௌதம் மேனன் தயாரிப்பில் நரகாசுரன் எனும் படத்தை இயக்கி முடித்தார். அதற்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது.

அது ரிலீஸ் ஆவதற்குள் 2 படங்களை இயக்கி முடித்துவிட்டார். அதில் முதலில் அருண் விஜய் , ப்ரியா பவானிசங்கர், பிரசன்னா நடித்த மாஃபியாசாப்டர் 1. இந்த படத்தில் எல்லாருக்கும் இன்ட்ரோ மட்டும் கொடுத்துவிட்டு, வில்லனை அறிமுகப்படுத்திவிட்டு படத்தை எண்டு கார்டு போட்டு முடித்துவிட்டார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

சரி, முதல் பாகமாவது விறுவிறுப்பாக இருந்ததா என்றால், ஸ்லோ மோஷனில் ஓடிய படத்தை ரசிகர்கள் ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் பார்த்தது தான் மிச்சம். அதற்கடுத்ததாக தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தை எடுத்து OTT நிறுவனம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் என அனைவரையும் மிரட்டிவிட்டார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இதையும் படியுங்களேன் - ரஜினியால் ஏற்பட்ட காயத்தை மறக்கவே முடியாது.!? வருத்தத்தில் மூழ்கிய தனுஷ்.!

தற்போது மீண்டும் தனது துருவங்கள் பதினாறு பட பாணியில் நிறங்கள் மூன்று எனும் படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். இதற்கிடையில் மாஃபியா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க நினைத்த இயக்குனர் கார்த்திக் நரேன்.

இதற்காக, அருண் விஜய்க்கு போன் போட்டு கேட்டாராம். ஏற்கனவே மாஃபியா முதல் பாகம் கொடுத்த எபெக்ட் இன்னும் விலகாமல் இருக்க, இதற்கிடையில் மாறன் பட தாக்கம் வேறு இருக்க, இதில் மாஃபியா 2ஆம் பாகமா என வியந்து. அது பாத்துக்கலாம் நான் கூறுகிறேன் என மழுப்பி நகர்ந்துவிட்டாராம் அருண் விஜய்.

Next Story