வயது வித்தியாசம் 16...நடிகையை 2வது திருமணம் செய்த நடிகர் கார்த்திக்....

by சிவா |
வயது வித்தியாசம் 16...நடிகையை 2வது திருமணம் செய்த நடிகர் கார்த்திக்....
X

பொய் சொல்லப்போறோம், கண்ட நாள் முதல்,யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக்.ஆங்கிலத்தில் ஸ்டாண்டப் காமெடி செய்து பிரபலமானவர்.

karthik

இவர் சில வருடங்களுக்கு முன்பு மிர்ச்சி ரேடியோ தொகுப்பாளினி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் நடிகை, நடிகையர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இளம் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை 2வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அம்ருதா மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

karthi

மேலும், சில வெப் சீரியஸ்களிலும் லீகலி ரேப் போன்ற சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு, கார்த்திக் இயக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கே. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

karthi

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கார்த்திக்கும், அம்ருதாவுக்கு வயது வித்தியாசம் 16 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

karthi

Next Story