Connect with us
banner

ரஜினியை நம்பி இருந்தது போதும்!..அடுத்த வேலையை ஆரம்பித்த இளம் இயக்குனர்..!

Cinema News

ரஜினியை நம்பி இருந்தது போதும்!..அடுத்த வேலையை ஆரம்பித்த இளம் இயக்குனர்..!

ரஜினி என்றாலே ஸ்டைல் தான். அந்த ஸ்டைல் மற்றும் அவரது கலகலப்பான நடிப்பும் தான் 6 முதல் 60-ஐ கடந்தவர்களையும் ரசிக்க வைக்கிறது. அப்படி பட்ட ரஜினியை சிவாஜி படத்தில் பார்த்தது. அதன் பின்னர் பார்க்கவில்லை என்ற ஏங்கிய ரசிகர்களுக்கு பேட்ட திரைப்படம் பெரும் விருந்தாக அமைந்தது.

அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். மீண்டும் நீண்ட வருடங்கள் கழித்து தங்களது பழைய ரஜினியை அவரது ஸ்டைலை திரும்ப கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதனை அடுத்து மீண்டும் ரஜினியை ஹீரோவாக வைத்து படம் இயக்குவார் என கூறப்பட்டது. அதற்காக கதை கூட ரஜினி கேட்டிருந்தார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவில்லை என்று தகவல் தெரிந்ததும், கார்த்திக் சுப்புராஜ் தான் தலைவர் 169 பட இயக்குனர் என பலர் நினைத்திருந்தனர்.

இதையும் படியுங்களேன் – என்ன ஆண்டவரே இப்படி பண்ணிடீங்க.., இறந்து போன நடிகரின் செயலை காப்பியடித்த கமல்.!?

ஆனால், இதற்கிடையில், நெல்சன் , ரஜினியிடம் கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம். அதனால் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிற்றுஎன்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. பேட்ட எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக்குகே வாய்ப்பு இல்லையா என பலரும் முணுமுணுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ், ஏற்கனவே தனக்கு ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ரெடியாகிவிட்டார். அதற்காக அந்த தயாரிப்பாளரிடம் பேசி , வேலைகளை ஆரம்பித்து விட்டார். ரஜினியை நம்பி இருந்தால் சரிப்பட்டு வராது என அடுத்த வேலையை கார்த்திக் ஆரம்பித்து விட்டார் எனவும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top