எஸ்.ஜே.சூர்யாவை இரவும் பகலுமாக டார்ச்சர் செய்யும் கார்த்திக் சுப்புராஜ்?? என்ன இருந்தாலும் இப்படியா பண்ணுறது!!
சமீப காலமாக எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. “ஸ்பைடர்”, “மெர்சல்”, “மாநாடு”, “டான்”, ஆகிய திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரையும் ஈர்த்தது. தற்போது தமிழின் முன்னணி நடிகராக எஸ்.ஜே.சூர்யா திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலுமாக இடைவிடாமல் நடந்து வருவதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, இது குறித்து தனது வீடியோ ஒன்றில் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு விஷால் சரியாக ஒத்துழைப்பு தராமல் இருந்தாராம். ஆதலால் எஸ்.ஜே.சூர்யா, “மார்க் ஆண்டனி” படத்துக்கு கொடுத்த கால்ஷீட் சிலவற்றை வேஸ்ட் செய்துவிட்டார்களாம்.
ஒரு கட்டத்தில் மிகவும் டென்சன் ஆன எஸ்.ஜே.சூர்யா, இனிமேல் தான் கால்ஷீட் கொடுத்து வேஸ்ட் செய்ய தயாராக இல்லை என்று கூறிவிட்டு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தில் நடிக்கப் போய்விட்டாராம். இதனிடையே “மார்க் ஆண்டனி” படக்குழுவினர் மீண்டும் கால்ஷீட் கேட்க எஸ்.ஜே.சூர்யாவை அணுகினார்களாம். ஆனால் அவர் கால்ஷீட் தர மறுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க: “துணிவு படத்துக்கு தூக்க கலக்கத்தில் ட்யூன் போட்ட இசையமைப்பாளர்”… மூத்த பத்திரிக்கையாளர் ஓபன் டாக்…
இதனை தொடர்ந்து விஷாலே, எஸ்.ஜே.சூர்யாவை தொடர்புகொண்டு, “இந்த முறை கால்ஷீட் தாருங்கள். நிச்சயமாக வேஸ்ட் செய்யமாட்டேன்” என வேண்டிக்கேட்டுக்கொண்டாராம். ஆதலால் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்திற்கான கால்ஷீட்டில் கொஞ்சம் அணுசரித்து “மார்க் ஆண்டனி” படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. ஆதலால்தான் இரவு பகல் என்று பாராமலும், இடைவெளியே இல்லாமலும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.