நான் சொன்னது வேற.. ஷங்கர் எடுத்தது வேற.. கேம்சேஞ்சர் தோல்வி பற்றி பேசிய கார்த்திக் சுப்பாராஜ்!…

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இப்போதுள்ள பல இளம் இயக்குனர்களுக்கும் சீனியர் இவர். ஜென்டில்மேன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், ஐ என தமிழ் சினிமாவில் முக்கிய படங்களை இயக்கியவர் இவர். இவர்தான் முதன் முதலில் தமிழ் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு வந்தவர் ஷங்கர்தான்.
இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, தொடர்ந்து தனது படங்களில் வரும் பாடல்களில் ரசிகர்கள் ரசிக்கும்படி கிராபிக்ஸ் காட்சிகளை வைத்தார். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பெரிய நடிகர்களின் ஆசையாகவே இருந்தது. ரஜினி, கமல், அர்ஜூன், விக்ரம், பிரசாந்த், விஜய் என பலரையும் வைத்து படம் இயக்கியிருக்கிறார். ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால், இதே ஷங்கர் இப்போது சினியர் நடிகர் ஆகிவிட்டார். கமலை வைத்து அவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, இந்தியன் 3 வருமா என்பதே தெரியவில்லை. அதோடு, ராம்சரணை வைத்து அவர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் ஓடவில்லை. இந்த படத்தில் வரும் பாடல்களை மட்டும் 75 கோடியில் செலவு செய்து எடுத்தார். படமோ சூப்பர் பிளாப் ஆகிவிட்டது.
இந்த படத்தின் கதையை ஷங்கரிடம் சொல்லியது இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்தான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘கேம் சேஞ்சர் கதையை ஒரு வரிக்கதையாகவே கூறினேன். என் சிந்தனைக்கு எட்டியவாறு மிகவும் சாதாரன ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரமாக சித்தரித்து ஷங்கர் சாரிடம் கொடுத்தேன்.
அதை அவர் பிரம்மாண்டமாக காட்டுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. கதைக்குள் பல கதாசிரியர்களின் ஈடுபட்டு இருந்தது. கதை, திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்யப்பட்டது. இது ரசிகர்களிடம் ஏன் சரியாக வரவேற்பு பெறவில்லை என கணிப்பது கடினம்’ என பேசியிருக்கிறார்.