More
Categories: Cinema News latest news

பருத்திவீரனை கொண்டாடும் மக்கள்.. நெகிழ்ச்சியில் பிரபல நடிகர்!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் கொம்பன். முத்தையா இயக்கிய படங்களிலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டரில் நீடானால் ஓடிய படம் இதுதான். சமீப காலமாக முத்தையா இயக்கிவரும் படங்கள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கார்த்தியுடன் இணைந்து கொம்பன் பாணியில் ‘விருமன்’ என்ற குடும்பக்கதையை மையமாக கொண்ட படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இப்படத்தின் மூலம் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Advertising
Advertising

இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் கதையும் சாதியை மையமாக வைத்தே நகரும் என தெரிகிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிப்பு மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தைப்பற்றி பேசிய கார்த்தி, விருமன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்குப் பின் மதுரைக்கு வந்துள்ளேன்.

இங்குள்ள மக்கள் இன்னும் பருத்திவீரன் படத்தைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.இப்பகுதி மக்களின் அரவணைப்பும், அன்பும் மாறாமல் உள்ளது. விருமன் படமும், பருத்திவீரன் படத்தைப்போல மிகப்பெரிய வெற்றியைப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Published by
ராம் சுதன்