ஹீரோயின் தான் ஆக முடியல..! செட்டில் ஆகிடுவோம் அதான் பெஸ்ட்டு… வாரிசு நடிகையின் சூப்பர் நியூஸ்..!

Published on: October 19, 2023
---Advertisement---

Kollywood Actress: தமிழ் சினிமாவில் கனவுக்கன்னி நாயகியாக 80ஸ்களில் ஹிட் அடித்தவர் ராதா. அவர் தன் அக்காவுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே இன்னமுமே எவர் க்ரீன் ரகமாகவே இருக்கிறது. அவரை தொடர்ந்து அவர் மகள்கள் இருவரும் நடிக்க வந்தனர். 

இதில் மூத்த மகள் கார்த்திகா நாயர். இவர் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு எண்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக எண்ட்ரி கொடுத்தவரை கோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அழைத்து வந்தனர். 

இதையும் படிங்க: இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?!.. நடிகர்களை மொத்தமா வேஸ்ட் பண்ன லோகேஷ் கனகராஜ்!…

அந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தாலும் கார்த்திகாவிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் புறம்போக்கு மற்றும் அன்னக்கொடி என இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். அதுவும் சரியாக வரவேற்பை பெறவில்லை.

இதுமட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தாலும் அங்குமே இவருக்கு சரியான வாய்ப்புகளே இல்லை. இதையடுத்து சினிமாவே வேண்டாம் என்றவர் திரையுலகில் இருந்து ப்ரேக் எடுத்தார். அடுத்து 2017ம் ஆண்டு இந்தி சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு பெரிய ரீச் கிடைக்கவில்லை. வெறும் 24 எபிசோட்களுடன் அந்த சீரிஸும் முடிக்கப்பட்டது. இதனையடுத்து கார்த்திகா பொதுவெளிக்கு வராமல் இருந்தார். சோஷியல் மீடியாவில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார். இனி சினிமா நமக்கு கை கொடுக்காது என முடிவெடுத்து விட்டார் போல.

இதையும் படிங்க: லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!

தடாலடியாக தனக்கு நிச்சயத்தார்த்தம் ஆகி விட்டதை தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் கையில் மோதிரத்துடன் அவர் வருங்கால கணவருடன் இருக்கிறார். ஆனால் மாப்பிள்ளை குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்த்திகா நாயர் இன்ஸ்டா பதிவைக் காண: https://www.instagram.com/p/Cykqmo-N1aP/?utm_source=ig_web_copy_link

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.