Connect with us

Cinema News

அண்ணன் என்ன வாடிவாசல் பண்றது!.. நான் பண்றேன் பாருங்க!.. கார்த்தியின் தில்லை பார்த்தீங்களா!..

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்படும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியான மெய்யழகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் மாட்டுடன் காத்து நிற்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

இதையும் படிங்க: இங்கிலீஸுக்கு எதிரினா அதுக்காக இப்படியா? சீமான் சூட்டிங்கின் போது பேசும் அந்த ஒரு தமிழ் வார்த்தை

மேலும் அந்த போஸ்டரை கார்த்தியின் அண்ணன் சூர்யாவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

மெய்யழகன் எனும் டைட்டிலில் தான் கார்த்தி நடித்து வருகிறார் என்பது சில மாதங்களுக்கு முன்பாகவே லீக் ஆன நிலையில் அதே தலைப்பையே தற்போது எந்த ஒரு மாற்றமும் இன்றி அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்த பள்ளியின் நிறுவனர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவரா? அட சூப்பர் ஹிட் பட நாயகியா இவங்க

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இடம்பெற்றிருந்த நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் பிரத்யேகமாக கார்த்திக்காக மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் 47-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது மெய்யழகன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சூர்யா வாடிவாசல் படத்திலிருந்து முழுவதுமாக விலகி விட்டாரா? சூர்யாவுக்கு பதில் கார்த்தி காளை மாட்டுடன் நிற்கும் போஸ்டருக்கு பின்னால் வெற்றிமாறனுக்கு ஏதாவது சூர்யா குறியீடு வைத்து கூறி உள்ளாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…

google news
Continue Reading

More in Cinema News

To Top