குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், கே.எஸ். ரவிகுமார், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
டாப் ஹீரோவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டிருந்த ராஜு முருகனுக்கு கார்த்தி படம் கிடைத்தும் இப்படி மிஸ் செய்து விட்டாரே என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
இதையும் படிங்க: மெர்சல் ஆக்கிட்ட!.. அப்படியே அள்ளுது!.. கிளுகிளுப்பு காட்டும் தளபதி 68 பட நடிகை!..
ஜுவல்லரியில் ஓட்டை போட்டு திருடும் ஜப்பானை போலீஸார் தேட ஆரம்பித்து பிடித்தார்களா? இல்லையா? என்கிற ஒரு வரி கதையை தலையை சுத்தி மூக்கை தொடுவது போல இயக்குநர் ராஜு முருகன் திரைக்கதை அமைத்து அவரும் டயார்ட் ஆகி பார்க்கும் நம்மையும் டயார்ட் ஆக்கி விடுகிறார்.
வழக்கம் போல நக்கலாக பேசி நடிக்கும் கார்த்தி இந்த படத்தில் இன்னும் நக்கலாக பேசி நடித்திருக்கிறார். அவ்வளவு தான் வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாத அளவுக்கு மொக்கைப் போட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஏறி வந்த ஏணிய எட்டி உதைச்சிட்டாங்க!. இதுதான் சினிமா!.. சூர்யா – கார்த்தி பற்றி புலம்பும் அமீர்….
அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோவுக்கு நடக்கும் அந்த விஷயம் எல்லாம் கொஞ்சம் கூட தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஏற்ற படமாகவே இல்லை என்பது தான் உண்மை.
சிறுத்தை அளவுக்கு படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கார்த்தி மறுபடியும் ஒரு அலெக்ஸ் பாண்டியன் படத்தை கொடுத்து ரம்பம் போட்டுள்ளார். இந்த தீபாவளி ரேஸில் கார்த்தியின் 25வது படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்காமல் மண்ணைக் கவ்வியுள்ளது.
ஜப்பான் – ஜெயிக்கவில்லை!
ரேட்டிங் – 2/5.
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…