சுயசரிதைக்கு இருக்க மரியாதையே போச்சுப்பா... அடுத்த யாரோட பயோபிக்கில் கார்த்தி நடிக்கிறார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கார்த்தில் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சர்தார். இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து கார்த்தி நடிக்க இருக்கும் படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனராக ஆசைப்பட்டவர் தான் கார்த்தி. ஆனால் அவருக்கு நடிகராகும் வாய்ப்பு தானாகவே அமைந்தது. கார்த்தி அறிமுகமான 'பருத்திவீரன்' திரைப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்குமே முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தன. வித்தியாசமான கதை களத்தில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவனாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டினை பெற்றது. தொடர்ச்சியாக அவரின் சர்தார் படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. அப்படமும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தில் அடுத்து நடிக்க இருக்கும் படம் ஒரு சுயசரிதையை தழுவிய படம் எனக் கூறப்படுகிறது. பிரபல நகைக்கடையில் ஓட்டை போட்டு திருடிய முருகனின் கதையே அடுத்து படமாக்கப்பட இருக்கிறது. அதில் முருகன் வேடத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜு முருகன் இயக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தில் துவங்கப்பட இருக்கலாம் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.