நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியாரே. இந்தப் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஜன நாயகன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகததால் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு சில படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகி வருகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதமே ரிலீஸாக வேண்டிய திரைப்படம்தான் வா வாத்தியாரே.
ஆனால் சில பல பிரச்சினைகளால் அந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை நிறுத்தி வைத்திருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுத்தால்தான் படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. அந்த பிரச்சினை இப்போது சரிசெய்யப்பட்டு இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் பராசக்தி படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் பராசக்தி படம் ரசிகர்களுக்கான கொண்டாட்டத் திரைப்படமாக இல்லாததால் பராசக்தி ஓடும் திரையரங்குகள் காத்து வாங்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரசிகர்களை பொறுத்தவரைக்கும் தியேட்டருக்கு போய் ஒரு மூன்று மணி நேரம் நல்லா டான்ஸ் ஆடி, கத்தி ஆரவாரம் செய்து வர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அதற்கான படமாக பராசக்தி படம் இருக்காது.
இந்த சூழ் நிலையில் ஜன நாயகன் திரைப்படம் மட்டும் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக இந்த வருட பொங்கல் தளபதி பொங்கலாகத்தான் இருக்கும். ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது. இதற்கிடையில் கார்த்தியின் வா வாத்தியாரே திரைப்படம் வெளியாகி முதல் பாதிவரை ரசிகர்களை கவர்ந்திருப்பதாக டிவிட்டரில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதாவது கார்த்தியின் கேரக்டரை நல்ல முறையில் வடிவமைத்திருப்பதாக கூறுகிறார்கள். ஒரு ஃபேண்டஸியான திரைப்படம். அதனால் நம்மை கதையோடு இணைக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் அற்புதமாக உள்ளதாக கூறுகிறார்கள்.இடைவேளியில் கார்த்தியின் என்ட்ரி மாஸ் . முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.வழக்கமான ஸ்டைலில் நலன் குமாரசாமி இந்தப் படத்தை பண்ணவில்லை என்றும் கூறுகிறார்கள்.