ஒழுக்கத்திற்கும் ரஜினிக்கும் ரொம்ப தூரம்!..அட இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க?.. கரு.பழனியப்பன் ஓபன் டாக்!..
தென்னிந்திய சினிமாவிலேயே உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த். தன் நடிப்பாலும் ஸ்டைலாலும் கிட்டத்தட்ட 50 வருடங்களாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு என்று ஒரு பெரும் படையே காத்துக் கொண்டிருக்கின்றது.
தலைவர் வந்து பார்க்க மாட்டாரா என்று அவர் வீட்டின் முன் தினந்தோறும் காத்துக் கிடக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். வில்லனாக அறிமுகமாகி இன்று நிஜ வாழ்க்கையிலும் சினிமாவிலும் உண்மையான ஹீரோவாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
70 வயதை கடந்த ஒரு இளைஞனாக இன்னமும் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார். இவரின் நடிப்பில் தற்போது ஜெய்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தான் இயக்குகிறார். அடுத்த வருடம் ஜெய்லர் திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.
இதையும் படிங்க : சந்திரமுகிக்காக பயந்து கொண்டே கங்கனாவிடம் சென்ற படக்குழு… அம்மணி சொன்ன பதில் தான் ஹைலைட்டே!
இந்த நிலையில் ரஜினியை பற்றியும் அவரது பழக்க வழக்கங்களை பற்றியும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் இயக்குனரும் நடிகருமான கரு. பழனியப்பன். இவர் மேடையில் தோன்றினாலே அனல்பறிக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்க்கக் கூடியவர்.
இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். மேலும் ரஜினியின் தீவிர ரசிகராகவும் இருக்கிறார் கரு. பழனியப்பன். சினிமா துறையிலேயே ரஜினியை தான் மிகவும் பிடிக்குமாம். சினிமாவில் எனக்கு ஒரு வித்தியாசமான ஆளாகத்தான் தெரிந்தார் ரஜினி என்று கூறுகிறார் பழனியப்பன். ஹீரோவுக்கு உரிய எந்த தோற்றமும் இல்லாமல் நம்ம ஆளுயா என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு இருந்தார்.
சினிமா என்றாலே ஒழுக்கம் தான் என்று இருந்த அந்த காலகட்டத்தில் அட ஒழுக்கத்திற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமே இல்லப்பா என்று இருந்தவர் ரஜினி என்றும் கூறினார். மேலும் ரஜினி நல்லவர் தான். ஆனால் ஒழுக்கம் பற்றி பேசி குழம்பிவிடக்கூடாது. அவர் நடிகராக இருந்தாலும் எல்லா கெட்டப்பழக்கங்களும் கொண்டவர். நடிகர்னாலே ஒழுங்கான தலைமுடி, நல்ல உடைகள் என்று தான் மனதில் இருக்கும். ஆனால் குழைந்த தலைமுடியுடன் ஏதோ உடைகளை அணிந்து சினிமாவில் சாதித்தவர் ரஜினி என்று அவரை பற்றி புகழாரம் சூடினார் பழனியப்பன். இன்று வரை ஏகப்பட்ட நடிகர்கள் தோன்றினாலும் இப்பவும் நான் ரஜினி ரசிகன் தான் என்று மார்தட்டி அடிச்சு கூறினார் பழனியப்பன்.