சிவாஜியை புடிக்கவே புடிக்காது!.. ஆனாலும் தைரியம் தான்!.. தில்லா கூறிய மேடைப்பேச்சு இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் தன் வெளிப்படையாக மேடைப்பேச்சால் அனைவரையும் தன்பால் கவருபவர் இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பன். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தவர். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு எழுதுவதை விட பேசுவது தான் பிடிக்குமாம். அதாவது மேடையில் பேசுவதை அந்த அளவுக்கு ரசிப்பாராம்.
பள்ளிப்பருவம், கல்லூரி பருவத்தில் தேர்வு எழுதுவதற்கு கூட மிகவும் சிரமப்படுவாராம். அந்த அளவுக்கு எழுதுவதை விரும்பாதவர். அதனால் தான் என்னவோ மேடைப்பேச்சில் கலக்கி வருகிறார் பழனியப்பன். மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர்களில் இவரும் ஒருவர்.
இதையும் படிங்க : ஷங்கர் கொடுத்த மாஸ் எண்ட்ரி..ஆனால் சிம்பிளாக மறுத்த விஜய்…ஏன் தெரியுமா?…
ரஜினியை மிகவும் பிடிக்குமாம். ரஜினியின் படங்களை மிகவும் ரசித்து பார்ப்பாராம். காரணம் ரஜினியை பார்த்தாலே ஹேய் நம்ம ஆளுங்கல ஒருத்தன் மாறி இருக்கான்யா என்று சொல்லிக் கொள்ளும்படியான தோற்றத்தில் மிகவும் எளிமையாக இருந்ததால் ரஜினியை இன்று வரை பிடிக்குமாம்.
மேலும் படிக்காதவன் படத்தில் கூட சிவாஜியை பார்க்கவே மாட்டாராம். ரஜினியை மட்டும் தான் பார்ப்பாராம். மேலும் எனக்கு சிவாஜியை புடிக்கவே புடிக்காது என்றும் கூறினார். ஏனெனில் திரிசூலம் மற்றும் சில படங்களில் ஸ்ரீதேவி, மற்றும் சில இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை பார்க்கும் போது எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறி,
மேலும் என் தலைமுறையில் ரஜினியின் படங்கள் தான் அதிகம் வந்தன. அதனாலேயே சிவாஜியிம் பழைய படங்களை பார்ப்பதற்கு எனக்கு தோன்ற வில்லை. ஒரு வேளை அந்த எண்ணம் தோன்றியிருந்தால் சிவாஜியின் பழைய படங்களை பார்த்திருப்பேன். மேலும் தேவர் மகன், முதல் மரியாதை போன்ற படங்கள் மூலமாக தான் சிவாஜி மீது ஒரு ஈர்ப்பு வந்தது. ஒரு வேளை அந்த இரு படங்கள் வராமல் போயிருந்தால் சிவாஜியை சுத்தமாக பிடிக்காமல் போயிருக்கும் என்று மிகவும் வெளிப்படையாக கூறினார்.
மேலும் ஒரு நடிகனை அவன் இவன் என்று தான் கூறுவோம். ஆனால் தேவர் மகன் , முதன் மரியாதை போன்ற படங்களை பார்த்த பின் தான் அவர் இவர் என்று ஒரு மரியாதையே பிறந்தது. சொல்லப்போனால் இந்த படங்களை பார்த்தபின் தான் சிவாஜியின் பழைய படங்களை எடுத்து ஒவ்வொன்றாக பார்த்தேன். பார்த்து மிகவும் வியந்தேன் என்று கூறினார் கரு.பழனியப்பன்.