படம் பார்த்துவிட்டு அமீரை திட்டிய கலைஞர் கருணாநிதி.. அப்படி என்ன ஆச்சி?!..
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு அம்சம் என்றாலும் சில சமயம் சில படங்களில் இடம் பெற்ற அழுத்தமான காட்சிகள் அல்லது கதை நம்மை பாதித்துவிடும். அந்த காட்சிகளில் ஒன்றி தன்னை அறியாமல் அழுதுவிடும் ரசிகர்களும் உள்ளனர். இப்படி பல தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களை புரட்டிப்போட்டுள்ளது.
அப்படி ஒரு திரைப்படம்தான் அமீர் இயக்கிய பருத்திவீரன். இப்படத்தில்தான் நடிகர் கார்த்தி அறிமுகமானார். ஒரு அறிமுக நடிகருக்கு இப்படி ஒரு சிறப்பான கதையும், கதாபாத்திரமும் அமையுமா என்பது சந்தேகமே. மதுரை பின்னணியில் உறவுகள் மற்றும் பகை ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இப்படம் மூலம் நடிகர் சரவணனும் திரையுலகில் இரண்டாவது ரவுண்டு வந்தார். அதேபோல், கார்த்தியும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இப்படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்த நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. அமிர் சில திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் அவரின் சிறந்த படமாக பருத்திவீரன் பார்க்கப்படுகிறது.
இப்படம் உருவானதும் கலைஞர் கருணாநிதி இப்படத்தை பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்துவிட்டு அருகில் அமர்ந்திருந்த அமீரிடம் எதுவுமே கூறவில்லையாம். அவரின் பின்னால் சென்று ‘ஐயா படம் எப்படி இருக்கிறது?’ என அமீர் கேட்க கருணாநிதியோ ‘என்னையா இப்படி படம் எடுத்து வச்சிருக்க?!.. நான் வீட்டுக்கு போய் தூங்க வேண்டாமா?’ என்றாராம். அந்த அளவுக்கு அப்படம் அவரை பாதித்துவிட்டது. இந்த தகவலை இயக்குனர் அமீரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிம்புவுக்கு பட வாய்ப்புகள் இல்லையா? புரியாத புதிரா இருக்கேப்பா!..