கலைஞரே பார்த்து வியந்த நடிகை ஸ்ரீபிரியா!.. எந்த விஷயத்தில் தெரியுமா?…

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியா. 70,80 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். ஸ்ரீதேவிக்கு பின் ஸ்ரீபிரியாதான் அதிக திரைப்படங்களில் நடித்தார். 1974ம் ஆண்டுதான் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

ருத்ரையா இயக்கத்தில் உருவான அவள் அப்படித்தான் திரைப்படதில் இவர் ஏற்ற மஞ்சு என்கிற கதாபாத்திரம் இப்போதும் நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களால் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது. முருகன் காட்டிய வழி என்கிற படம் மூலம் ஸ்ரீபிரியா அறிமுகமானார். அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் சுஜாதாவின் தங்கையாக வருவார். அதன்பின் தமிழில் மட்டும் 108 படங்கள் நடித்தார். குறிப்பாக ரஜினி, கமலுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். 80களில் முன்னணி நடிகையாக இருந்தார். சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். ஆறு சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தமிழை அழகாக உச்சரிக்கும் நடிகைகளில் தனக்கு பிடித்த சில நடிகைகளில் ஸ்ரீபிரியாவும் ஒருவர் என கலைஞர் கருணாநிதியே ஒரு மேடையில் பேசியுள்ளார். ஒரு சினிமா விழாவில் அவர் பேசியதை கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ‘அவரின் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது’ என கருணாநிதி பேசியுள்ளார். இதை ஸ்ரீபிரியாவே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இத்தனைக்கும் ஸ்ரீபிரியா சினிமாவில் நடிக்க துவங்கும்போது அவ்வளவாக தமிழ் பேச வராது. ஏனெனில் இவர் சிறு வயது முதலே ஆங்கில வழி கல்வியில் படித்தவர். ஆனால், மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு சிறப்பாக தமிழ் பேசி நடிக்கும் நடிகையாக அவர் மாறியது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story