எம்.ஜி.ஆருக்கு வசனம் எழுதிய கருணாநிதி!.. ஆனால் டைட்டில் கார்டில் பெயர் வராத சோகம்!..

by சிவா |
karuna
X

திரையுலகில் எம்.ஜி.ஆர் நடிகராகவும், கருணாநிதி கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் ஒரேநேரத்தில் வளர்ந்தனர். இருவரும் நண்பர்களாகவும் இருந்தனர். எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை பேசி எம்.ஜி.ஆர் கைதட்டல் வாங்கினார்.

karuna

எம்.ஜி.ஆர் முதலில் நாடகங்களில் நடித்து பின்னாளில் நடிகராக மாறினார். நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களே அவருக்கு கிடைத்தது. சினிமாவிலும் முதலில் ஓரிரு காட்சிகள் வரும் நடிகராகவே இருந்தார். பல கஷ்டங்களை தாண்டித்தான் கதாநாயகனாக நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர் அதேபோல், கருணாநிதி ஒருபக்கம் அண்ணாவுடன் அரசியல் பிரவேகம், ஒரு பக்கம் சினிமாவில் கதை,வசனம், திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுவதுவது என ஒரு பக்கம் முன்னேறி வந்தார்.

rajakumari

rajakumari

எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி வசனம் எழுதிய முதல் திரைப்படம் அபிமன்யு. இரண்டாவது திரைப்படம் ராஜகுமாரி. இந்த இரண்டு திரைப்படங்களிலும் எம்.ஜி.ஆர்தான் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியும் அவரின் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறவில்லை. கருணாநிதி அப்போது பிரபலமான கதாசிரியர் இல்லை என தயாரிப்பாளர் கருதியதால் இயக்குனர் ஏ.எஸ்.சாமியின் பெயரை போட்டதாக கூறப்படுகிறது.

abimanyu

abimanyu

அதன்பின் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் திரைக்கதை, வசனம் எழுதியபோதுதான் கருணாநிதியின் பெயர் டைட்டில் கார்டில் முதன் முதலாக இடம் பெற்றது.

Next Story