Cinema History
எல்லா அரசியல்வாதிகளையும் சாடிய ரஜினி படம்! கலைஞர் பார்த்து சொன்ன ஒரு வார்த்தை
Rajini: ரஜினியின் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தை கலைஞர் வந்து பார்த்து அவர் என்ன சொன்னார் என்பதை பற்றி சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி பேசியது பெரும் வைரலாகி வருகின்றது.
சிவாஜி திரைப்படத்தை சங்கர் இயக்கினார். அந்தப் படம் முழுக்க முழுக்க அரசியலையும் அரசியல் சார்ந்த விஷயங்களையும் லஞ்சம் ஊழல் இவற்றை பற்றி தெளிவாக விளக்கும் படமாக அமைந்தது.
அந்த படத்தின் கதை தெரிந்தும் கலைஞர் கருணாநிதி அந்த படத்தை வந்து பார்த்திருக்கிறார். அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரம். அவருடன் சேர்ந்து ர, வைரமுத்து இவர்களும் படத்தை பார்த்திருக்கின்றனர். அப்போது வைரமுத்து ரஜினியிடம் இப்படிப்பட்ட ஒரு படத்தை அதுவும் முதலமைச்சர் அருகில் இருந்து பார்க்கிறீர்கள் என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும் என கேட்டாராம்.
இந்த படத்தை பார்த்து கருணாநிதி ரஜினியிடம் இந்த மாதிரி தான் உழைக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு பெரு மூச்சு விட்டாராம். அதன் பிறகு வைரமுத்துவிடம் கருணாநிதி இந்த படத்தை பார்ப்பது மட்டுமல்ல நூறாவது நாள் விழாவிலும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என சொல்லிவிட்டு சென்றாராம்.
அவர் சொன்னதைப் போல சிவாஜி படத்தின் 100வது நாள் விழாவிற்கு கருணாநிதி கலந்துகொண்டு படத்தில் வேலை செய்த அத்தனை கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தாராம். ஒரு அரசியல் சார்ந்த படமாக இருந்தாலும் அதை ஒரு முதலமைச்சர் அருகில் இருந்து அரசியல் சம்பந்தப்பட்ட படத்தை பார்ப்பது என்பது கடினமான விஷயம்தான்.
இருந்தாலும் அந்தப் படத்தை பார்த்து கலைஞர் சொன்னது அதைவிட ஒரு பெரிய விஷயம். அது மட்டுமல்லாமல் முதல்வன் படத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது என செய்திகளில் வெளியானதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது கலைஞரின் மீது உள்ள அன்பால் அந்தப் படத்தில் நான் முதல்வனாக நடிக்க மாட்டேன் என ரஜினி சொன்னதாக ஒரு செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.
கருணாநிதி மீது ரஜினிக்கு எப்போதும் ஒரு தனி மரியாதையும் அன்பும் இருக்கத்தான் செய்தது. அதுமட்டுமல்லாமல் அந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி பேசிய சில பேச்சு அங்கிருந்த அனைவரையும் கலகலப்பில் ஆழ்த்தியது. அதுவும் இந்த கட்சியில் இருக்கும் பெரும்பாலான பேர் மிக மிகப் பழைய மாணவர்கள் என்றும் அவர்களை வைத்து இந்த அளவுக்கு கொண்டு செலுத்துவதில் ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஒரு பெரிய சல்யூட் எனக் கூறியது அரங்கத்தில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது.
இது துரைமுருகனை குறிப்பிட்டுதான் ரஜினி பேசினார் என்றும் செய்திகளில் வர துரைமுருகனிடமே இதைப் பற்றி கேட்டபோது பல்லு போன நடிகர்கள் எல்லாம் நடிக்கத்தானே செய்கிறார்கள் என சூசகமாக பதிலடி கொடுத்திருக்கிறார் துரைமுருகன்.