ஸ்டார்களை காப்பாற்றாத கருங்காலி மாலை!.. சிக்கி சின்னபின்னமான சிவகார்த்திகேயன்...
Sivakarthikeyan: சமீபகாலமாக கருங்காலி மாலை என்கிற பெயர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அடிபடுகிறது. அது தொடர்பான வியாபாரங்களும், அது தொடர்பான செய்திகளையும் பார்க்க முடிகிறது. ஒருபக்கம் கருங்காலி மாலையின் சக்தி இதுதான் என பலரும் பேச துவங்கியுள்ளனர்.
சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கருங்காலி மாலைகளை அணிய துவங்கியதுதான் இதற்கு முக்கிய காரணம். கோடம்பாக்கம், சாலிகிராமம் பக்கம் போனால் சினிமா துறையில் இருக்கும் பலரும் இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: சான்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாரு ரஜினிகாந்த்!.. சோகத்தில் புலம்பிய எஸ்.வி. சேகர்!..
கருங்காலி மாலை அணிந்தால் அதிர்ஷ்டம். தீங்கு நம்மிடம் வராது.. நமக்கு நல்லதே நடக்கும். குறிப்பாக எல்லாம் வெற்றியாக அமையும் என்பதுதான் இதன் அடிப்படை நம்பிக்கை. ஆனால், உண்மையிலேயே அதில் சக்தி இருக்கிறதா என்பது தெரியவில்லை. சிவகார்த்திகேயன் இதை பல நாட்களாக அணிந்திருந்தார். ஆனால், அவரின் பிரின்ஸ் படம் ஊத்திக்கொண்டது.
அதைவிட இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி அவரை வெளியே கூட விடாமல் செய்துவிட்டது அவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் அயலான் படம் ஓடுமா என்பதே தெரியவில்லை. ஏனெனில், பெண் ரசிகைகளின் அதிருப்திக்கு அவர் ஆளாகிவிட்டார். எல்லோர் வீட்டில் ‘இவரா இப்படி செய்தார்?’ என பேச துவங்கிவிட்டனர். எனவே, அந்த கருங்காலி மாலையை சிவகார்த்திகேயன் கழட்டிவிட்டார்.
இதையும் படிங்க: அத்தனை பிரபலங்களும் பாராட்டுறாங்க!.. ஆனாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் இவ்ளோ தானா?..
ஒருபக்கம், லியோ படம் வருவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜுக்கு இருந்த ஸ்டார் வேல்யூ என்பது வேறு. ஆனால், லியோ படம் எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனம் வந்தபின் அவரின் இமேஜ் கொஞ்சம் குறைந்துள்ளது. ரஜினியை வைத்து அவர் எடுக்கவுள்ள படத்தில் கூட நிறைய மாற்றங்களை அவர் செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு, ரஜினியும் அதில் அதிகமாக தலையிட வாய்ப்பிருக்கிறது. லோகேஷும்தான் கருங்காலி மாலை அணிந்திருக்கிறார்.
எனவே, கருங்காலி மாலை நல்லதா, வெற்றியை கொடுக்குமா என்பதெல்லாம் அவரவரின் சொந்த விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது. அதன் மூலம் நல்லது நடக்குமா என்பதெல்லாம் அவரவரின் அனுபவம் சார்ந்தது மட்டுமே.
இதையும் படிங்க: மாயா, பூர்ணிமாவை கிழித்து தொங்கவிட்ட சுரேஷ் தாத்தா!.. அட பின்னாடி தட்டோட நிக்கிறது யாருன்னு பாருங்க!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms