Connect with us

இவங்கதான் கோலிவுட்டின் கங்கனா….! சொன்னா ஏத்துபீங்களா…? நடந்த விஷயம் அப்படி…

gana_main_cine

Cinema News

இவங்கதான் கோலிவுட்டின் கங்கனா….! சொன்னா ஏத்துபீங்களா…? நடந்த விஷயம் அப்படி…

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். அதுதான் அவர் நடித்த கடைசி தமிழ் படமும் கூட. அதற்கு முன் 2006 ஆம் ஆண்டு வெளியான ஹேங்ஸ்டர் என்ற படம் தான் அவர் அறிமுகமான படம்.

gana1_cine

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கங்கனா பாலிவுட்டில் முன்னனி நடிகையாக மாறினார். மேலும் அரசியலில் ஆர்வம் உடைய கங்கனா அரசியல் தலைவிகளின் வாழ்க்கை வரலாற்று படங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் இயக்குனராகவும் மாறி இருக்கிறார்.

இதையும் படிங்கள் : தளபதி-67க்காக நடிகை திரிஷாவின் தில்லாலங்கடி வேலை…! விஜய் அப்படி பட்டவரே கிடையாதே…

gana2_cine

எதையும் எதிர்க்கும் துணிச்சல் உடைய கங்கனா வலது சாரி கட்சிகளை சரமாரியாக சாடி வருகிறார். இவரின் பேச்சு அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்வது வழக்கம். இதே போல் சக நடிகர்கள், நடிகைகளை பற்றியும் அவர்களின் படங்களை பற்றியும் தொடர்ந்து விமர்சித்து வம்பில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கை.

gana3_cine

இதே போல் ஒரு நடிகை கோலிவுட்டில் வலம் வருகிறார் என்று சொன்னால் நம்புவீங்களா? ஆம். அவர் வேறு யாருமில்லை. நடிகை கஸ்தூரி. தொடர்ந்து தான் பதிவிடும் செய்திகளால் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நடிகை கஸ்தூரி எந்த பயமும் இல்லாமல் அனைவரையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். அதனாலயே இவரை கோலிவுட்டின் கங்கனா என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top