rajkiran
ராஜ்கிரண்:
ராஜ்கிரண் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்தப் படத்தை தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாதான் இயக்கினார். ஆனால் உண்மையில் அந்தப் படத்தை கஸ்தூரி ராஜாவே இயக்கவில்லை என தற்போது ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் ராஜ்கிரண் ஒரு தயாரிப்பாளராக டிஸ்டிரிபுயூட்டராகத்தான் இருந்தார்.
முதலில் ராமராஜனை வைத்து ஒரு படத்தை தயாரித்தார் ராஜ்கிரண். அந்த நேரத்தில் ராமராஜன் 30 படங்களுக்கு மேல் நடித்து மிகவும் பீக்கில் இருந்த நடிகர். அவருக்கு ஜோடியாக கஸ்தூரியை நடிக்க வைத்தார். ராஜ்கிரண் படத்தில்தான் கஸ்தூரி முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படத்திற்காக ராஜ்கிரண் வெளியில் ஃபைனான்ஸ் வாங்கித்தான் தயாரித்தார். ஆனால் ராமராஜன் அந்த நேரம் மிகவும் பிஸியான நடிகர் என்பதால் அவரால் சரியாக கால்ஷீட் கொடுக்க முடியாமல் ராஜ்கிரணுக்கும் அதனால் கொஞ்சம் கடனாகிவிட்டது.
ரஜினியின் சம்பளத்தை விட அதிகம்:
அப்போதுதான் ராஜ்கிரணுக்கு நெருங்கிய நண்பரும் பத்திரிக்கையாளருமான துரை ராமச்சந்திரன் ‘பேசாமல் நீங்களே ஹீரோவாக நடிங்கள். உங்களை ப்ரோமோட் செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதுமட்டுமில்லாமல் ரஜினியை விட அதிக சம்பளமும் வாங்க வைக்கிறேன்’ என அறிவுரை கூறியிருக்கிறார். அப்போது ரஜினியின் சம்பளம் வெறும் 60 லட்சமாம்.
அப்போதுதான் ராஜ்கிரணுக்கு கதை சொல்ல கஸ்தூரி ராஜா வந்திருக்கிறார். விசுவின் உதவியாளர் என்பதால் கஸ்தூரி ராஜா மேல் ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கஸ்தூரி ராஜாவின் கதை ராஜ்கிரணுக்கு பிடிக்கவில்லையாம். இருந்தாலும் ஒரு மூன்று மாதம் கஸ்தூரி ராஜாவுக்கு ரூம் எல்லாம் போட்டுக் கொடுத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லியிருக்கிறார். ஆனாலும் கஸ்தூரி ராஜா சரியாக பண்ணவில்லையாம். அதன் பிறகு ராஜ்கிரணே களத்தில் இறங்கி அவரே ஒரு கதையை ரெடி செய்து ஸ்கிரீன் ப்ளே எல்லாம் செய்திருக்கிறார்.
முதலில் தயங்கிய மீனா:
அதன் பிறகு அவருக்கு ஜோடியாக ராதிகா, ரேவதி போன்றவர்களிடம் அணுகியிருக்கிறார்கள். ஆனால் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லையாம். அந்த நேரத்தில் குமுதம் அட்டை படத்தில் மீனாவின் போட்டோவை பார்த்து அவரது அம்மாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் முதலில் தயங்க அதன் பிறகு சம்மதித்திருக்கிறார். அப்போது மீனா 12 படித்துக் கொண்டிருந்தாராம். அவருக்கு சம்பளமாக 45000 பேசியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பும் ஆரம்பமாகியிருக்கிறது. கஸ்தூரி ராஜாவின் டைரக்ஷனும் யாருக்கும் திருப்தி இல்லையாம். ஒரு வாரம் டைரக்ட் செய்தாராம். அதன் பிறகு அந்தப் படத்தை ராஜ்கிரண் தான் டைரக்ட் செய்தாராம். படம் வெளியாகி டைட்டில் கார்டில் டைரக்ஷன் யார் பெயர் போடலாம் என கேட்க, கஸ்தூரி ராஜா பெயரையே போட்டுவிடலாம். பாவம், இதனால் அவன் கெரியர் ஸ்பாயில் ஆகிவிடும். பொழைச்சு போகட்டும் என ராஜ்கிரண் சொன்னாராம். அப்படித்தான் என் ராசாவின் மனசிலே படத்தில் கஸ்தூரி ராஜா வேலை செய்திருக்கிறார்.
இந்தப் படம் கிட்டத்தட்ட 275 நாள்களுக்கு மேல் ஒடி வெற்றி வாகை சூட இதன் காரணமாகத்தான் கஸ்தூரி ராஜாவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்ததாம். இதுவரைக்கும் இந்த செய்தி யாருக்கும் தெரியாது. ஏன் தனுஷுக்கே தெரியுமா தெரியாதா என தெரியவில்லை என இந்த தகவலை பகிர்ந்த துரை ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…