Categories: latest news

Dhanush: பதில் சொல்ல நேரமில்ல.. நயன்தாரா அறிக்கைக்கு பிறகு தனுஷின் தந்தை கொடுத்த பதில்

Dhanush: நயன்தாரா அறிக்கைக்கு தனுஷ் தரப்பில் இருந்து பதில் வரும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்க அவர் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா பதில் கூறியிருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் ஒரு நகைச்சுவை கலந்த எண்டெர்டெயிண்ட் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கு பிறகு தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் காதலும் மலர்ந்தது. அந்த காதலால் விக்னேஷ் சிவன் கதையில் கவனம் செலுத்தாமல் நயன் பின்னாடியே அலைந்ததாகவும் தெரிகிறது. இதனால் புரடக்‌ஷனுக்கு கொஞ்சம் பாதிப்பு இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதனால் படத்தின் பட்ஜெட் சொன்னதை மீறி அதிமானதால் தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாகவும் சொல்லபடுகிறது.

இதையும் படிங்க: போனா போது! அதையே நடிக்க வைங்க..சுந்தர் சி அலட்சியப்படுத்திய நடிகை.. யாருனு தெரியுமா?

இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சி மற்றும் பாடலை நயனின் தி பியாண்ட் ஆஃப் ஃபேரிடேல் ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் இருந்த என்ஓசி பெறுதற்கு நயன் இரண்டு வருடம் காத்திருந்தார். ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து என்ஓசி கொடுக்கப்படவே இல்லை. அதை பற்றி எந்த பதிலும் அளிக்கவில்லை. பொறுத்திருந்து பார்த்த நயன் அவரின் ஆவணப்படத்தின் டிரெய்லரில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சியை பயன்படுத்தியிருந்தார்.

இதை எதிர்த்து தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார். இப்படி இவர்கள் பிரச்சினை போய்க் கொண்டிருக்க தனுஷ் இதை பற்றி எங்கேயும் வாயே திறக்கவில்லை. அவர் படங்களில் பிஸியாக இருப்பதால் அதுவும் இப்போது இட்லி கடை படத்தின் படப்பிடிப்பிற்காக பாங்காங் சென்றுள்ளதால் அவரிடம் இருந்து எந்த வொரு அறிக்கையும் வெளியாக வில்லை.

இதையும் படிங்க: Gossip: ஓவர் ஆட்டம் போடும் நடிகர்… இதெல்லாம் நல்லா இல்ல தம்பி!

ஆனால் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இதை பற்றி பேசிய ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ‘எங்களுக்கு வேலைதான் முக்கியம். நம்மை துரத்துபவர்களுக்கோ தம்மை பற்றி பேசுபவர்களுக்கோ பதில் சொல்ல நேரமில்லை. என்னை மாதிரியே என் மகனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்’என கூறியிருக்கிறார்.

Rohini

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

22 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago