என்னையும் குஷ்பூவையும் அப்படி பேசாதீங்க! கஸ்தூரி ராஜாவுக்கு இப்படியெல்லாம் நடந்துருக்கா?

Published on: January 12, 2024
kush
---Advertisement---

Director Kasthuri Raja: மண் மனம் கமழும் விதத்தில் படம் எடுப்பவர்களில் இயக்குனர் பாரதிராஜாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு இயக்குனர் இருக்கிறார் என்றால் நிச்சயமாக கஸ்தூரி ராஜாவை சொல்லலாம். மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டி படம் எடுப்பதில் மிகச் சிறந்தவர் கஸ்தூரி ராஜா.

என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் புகழைப் பெற்றார் கஸ்தூரி ராஜா. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த போது ராஜ்கிரண் கொடுத்த வாய்ப்பு தான் என் ராசாவின் மனசிலே திரைப்படம். அதனாலேயே ராஜ்கிரணுக்கு எப்பொழுதும் கடமைப்பட்டவராகவே இருப்பார் கஸ்தூரி ராஜா.

இதையும் படிங்க: உங்கள விட பெருசா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..

கிராமத்து கதைகளையே மையப்படுத்தி எடுத்த கஸ்தூரி ராஜா தனுஷை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் என்ற விடலைப் பருவ காதலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படத்தின் மூலம் தனுஷுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைந்தது.

தன் வாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்களை வைத்தும் சில படங்களை எடுத்தார்.  நாட்டுப்புறப்பாட்டு என்ற படத்தை எடுத்தார். அந்த படம் நாட்டுப்புற கலைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் பல  மாதங்கள் இந்தப் படம் ஓடி வெற்றி கண்டது.

இதையும் படிங்க: நீ எல்லாம் ஒன்னுமே இல்ல.. சீரியல் ஹீரோவால் அசிங்கப்பட்ட விஷ்ணு!… இதுக்காகதான் பிக்பாஸ் எண்ட்ரியாம்!

எட்டுப்பட்டி ராசா இவரது ஒரு அற்புதமான படைப்பாகும். இவரது இயக்கத்தில் குஷ்பூ கிட்டத்தட்ட 9 படங்கள் நடித்திருக்கிறார். குஷ்பூவிடம் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் கஸ்தூரி ராஜா படம் என்றால் என்ன கதை  என்று கூட கேட்கமாட்டாராம். உடனே நடிக்க வந்து விடுவாராம்.

இதை வைத்தே பல பத்திரிக்கைகள் இவர்கள் இருவரையும் சேர்த்து பல வதந்திகளை எழுதினார்களாம். இதை சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய கஸ்தூரி ராஜா ‘என் மகள் பள்ளியில் இருந்து வரும் போது அழுது கொண்டே வருவாள். என்னாச்சுனு கேட்டால் உங்க சித்தி நல்லா இருக்காங்களா?’ என குஷ்பூவை குறித்து கிண்டலடிப்பார்களாம்.

இதையும் படிங்க: ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் என்ன? பத்திரிக்கையாளர் கேள்விக்கு நச் பதில் சொன்ன பாலச்சந்தர்…

அதனால் இதை குறிப்பிட்டு கஸ்தூரி ராஜா பத்திரிக்கையாளர்களிடம் ‘இனிமேல் அப்படி தப்பா எழுதாதீங்க. குஷ்பூ எனக்கு சகோதரி மாதிரி. உங்களுக்கு இப்படித்தான் தப்பா எழுதி பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. அதற்கு இந்த எழுதுகோலை பயன்படுத்தாதீர்கள்’ என ஒரு சிலரை குறிப்பிட்டு கஸ்தூரி ராஜா பேசினார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.