Connect with us

பெண்களைப் பார்த்தாலே மூடு வந்துடுதுன்னு சொன்னா அசிங்கம் தான்….! இப்படி எல்லாமா பேசுனாங்க கஸ்தூரி

Cinema History

பெண்களைப் பார்த்தாலே மூடு வந்துடுதுன்னு சொன்னா அசிங்கம் தான்….! இப்படி எல்லாமா பேசுனாங்க கஸ்தூரி

இணையதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து திடீர் திடீரென சர்ச்சைகளை கிளப்பி வருபவர் நடிகை கஸ்தூரி. அந்த வகையில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கஸ்தூரி இணையதளத்தில் கொடுத்த வைரல் பேட்டி ஒன்று இப்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அது என்னவென்று பார்த்தால் இவ்ளோ பேசுனாங்களா கஸ்தூரி என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அப்படி என்ன தான் பேசினாங்கன்னு பாருங்களேன்…!

90 எம்எல் பட கதாபாத்திரத்தில் நடிக்க என்னைக் கேட்டாங்க. அப்போ நான் வெளிநாட்டுல இருந்ததனால நான் பண்ணல. எனக்கு படம் ரொம்ப புடிச்சது. இந்தப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் சுதந்திரமான தைரியமான கேரக்டரில் நடித்துள்ளனர். பெண் இயக்குனரின் படமாக இருப்பதால் படம் இன்னும் ரொம்ப ப்ரஷ்ஷா இருக்கு.

kasturi

ஆண்கள் எல்லாரும் வயசுக்கோளாறுல ஒரு நாலைந்து வருஷம் வேண்டுமானால் மெச்சூரிட்டி இல்லாம இருக்கலாம். அதுக்காக வாழ்நாள் பூரா பொம்பளயை பார்த்தா வந்துரும். நீ டிரஸ்ஸ போட்டா வருது. போடலைன்னா வருதுன்னு சொன்னா டிரஸ் என்ன டிரஸ்;?

பெண்களுடைய ஆடையில தான் ஒரு ஆணோட கற்பு இருக்குறதுன்னு சொன்னா ஆண் பிறவியையே இழிவு படுத்துற ஸ்டேட்மென்ட். லேடீஸ்ஸ பார்த்தாலே என்னால கன்ட்ரோல் பண்ண முடிலன்னு சொல்றது அசிங்கமா இல்லையா? எல்லா ஆண்களையும் அப்படி நினைக்காதீங்க.

எங்க பாட்டிலாம் ரவிக்கையே போடல. எங்க வீட்ல உள்ள ஆண்கள்லாம் என்ன ஆயிட்டாங்க? நம்ம மூதாதையர் எல்லாம் ரவிக்கை போட மாட்டாங்க. அவங்கள எல்லாம் நாம காமக்கண்களோடவா பார்ப்போம்?

ட்ரஸ் மட்டும் ஒரு விஷயமல்ல. டிரஸ்ஸ மட்டும் போடுறதை வச்சி அவங்க மூடு வருதுன்னு சொல்லக்கூடாது. சேலை கட்டுனா கண்ணியம். சல்வார் கமீஸ் போட்டா எப்படி இருக்குமோ? கவுன் போட்டா அதுக்கும் மேல…!மேலை நாடுகளில் சேலை கட்டுனா தான் இடுப்பு தெரியுது. கவர்ச்சிங்கறாங்க. ஆண்கள் சிலர் சாட்ஸ் போடுறது கூட கேவலமா தான் இருக்கு.

பெண்களைப் பெண்களா பாருங்க. ஒரு தங்கை அல்லது அக்கா வாராங்கன்னா அவங்கள நாம பெண்பிள்ளையாக தவறா பார்ப்போமா? குழந்தைகள் அரைஞான் கயிறு மட்டும் தான் போட்டுட்டு ஓடுது.

kasturi

ஏன் அம்மன் சாமி கூட நிர்வாணம் தாங்க. அப்படிப்பட்ட ஒரு மேம்பட்ட கலாச்சாரத்தில இருந்து தான் நாம வந்துருக்கோம். அதை மறக்க வேண்டாமே. ஆண்கள் எல்லாருமே உயரிய நோக்கத்தோட உயரிய பண்பாடுகளோட இருக்கலாமே. அது ஒரு உயரிய பண்பாடு.

பெண்களைப் பார்த்தாலே மூடு வந்துடுதுன்னு சொன்னா அசிங்கம் தான். ஒருத்தரோட தவறைச் சுட்டிக்காட்டாம அதை நியாயப்படுத்தி அதே தவறை மறுபடியும் மறுபடியும் பிறர் செய்ய ஆரம்பிச்சிடுறாங்க.

பெண்களின் கண்களால் தான் கவர்ச்சி வருகிறது. உர்ருன்னு மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்குற பொண்ணு எவ்வளவு தான் கவர்ச்சியா ட்ரஸ் போட்டாலும் யாரு பார்க்க முடியும்? அதுவே ரொம்ப ஹோம்லியா அழகான சேலைல வந்து மல்லிகைப்பூ வச்சிக்கிட்டு கண்ணால பார்க்கற எந்த பொண்ணுக்கிட்ட நீங்க சரண்டர் ஆகாமல் இருக்க முடியும்? இதெல்லாம் நார்மலான விஷயம். வெறும் ட்ரஸ்ஸ மட்டும் வச்சி பெண்களை பழி போடுறது சாக்கு சொல்றது அவ்ளோதான்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top