‘காதல் கோட்டை’ படம் இந்த இயக்குனரின் உண்மைக் கதையா? நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்
Kadhal Kottai" 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் அஜித் மற்றும் தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் காதல் கோட்டை. இதற்கு முன்புவரை எத்தனையோ காதல் கதைகளை பார்த்திருப்போம். பார்த்ததும் காதல், பேசினாலே காதல் , மோதலில் காதல் என பல வகையான காதல் கதைகளோடு அமைந்த எண்ணற்ற படங்களை கண்டு களித்திருக்கிறோம்.
ஆனால் காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் கடைசி வரை பார்க்காமலேயே காதலித்து இனிமேல் அவ்வளவுதான் என நினைக்கும் போது ஒருவரையொருவர் சந்திக்கும் நேரத்தில் ஏற்படும் உணர்வுகளை வலியோடு அழகாக காட்டியிருப்பார் அகத்தியன். இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வீரபாண்டியன்.
இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணன் திருமண உறவு குறித்த ரகசியத்தை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!.. செம மேட்டர்!..
வான்மதி, காதல் கோட்டை , கோகுலத்தில் சீதை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அகத்தியன் காதல் கோட்டை படத்தின் ஆலோசனையில் இருக்கும் போது இந்த கதை செட் ஆகுமா என்று கேட்டிருக்கிறார்.அதுவரைக்கும் காதல் கோட்டையின் ஒன் லைனை மட்டுமே சொல்லி எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில்தான் இருந்தாராம்.
அப்போதுதான் இயக்குனர் வீரபாண்டியன் தன்னுடைய கதையை சொல்லியிருக்கிறார். அதாவது வீரபாண்டியன் புத்தகம் , கதைகள் எழுதும் பழக்கமுடையவராம். அப்படி அவர் எழுதிய ஒரு புத்தகம் வாரந்தோறும் பள்ளிகளுக்கும் அனுப்பப்படுமாம். அந்தப் புத்தக்கத்தை படித்த ஒரு ஆசிரியை இவர் எழுதிய கதையை படித்து அவர் மீது காதல் வயப்பட்டாராம். அதிலிருந்து கடிதங்கள் மூலமாக இவர்கள் தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: விஜய் படத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே ஆர்ஜே பாலாஜி!.. சிங்கப்பூர் சலூன் தலை தப்புமா?..
கிட்டத்தட்ட 8 வருடங்கள் பார்க்காமலேயே இருவரும் காதலித்து பின் ஒரு திருமணத்தில் சந்தித்தார்களாம். அதன் பிறகே இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. இவருடைய நிஜ வாழ்க்கை கதையை சொன்ன பிறகே அகத்தியனுக்கு இந்தப் படத்தை எடுக்க ஒரு தைரியம் வந்ததாம்.