ஹிந்தியில் அட்டர் ஃபிளாப் ஆன 'காதலுக்கு மரியாதை'....ஹீரோயின் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...
தமிழ் சினிமாவில் காதலை பறைசாற்றும் விதமாக எத்தனையோ காதல் படங்கள் வந்துள்ளன. காதலர்களுக்கே அர்ப்பணிக்கும் விதமாக காதலர் தினம், கல்லூரிவாசல், காதல்கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள் இப்படி பல படங்கள் வெளிவந்து காதலின் மகத்துவத்தை மக்களறிய செய்தன.
அந்த வகையில் இன்றளவும் கொண்டாடும் வகையில் அமைந்த படம் காதலுக்கு மரியாதை திரைப்படம். 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் நடிகர் விஜய், நடிகர் ஷாலினி, ராதாரவி உட்பட பல நடிகர்கள் நடித்து உன்னதமான காதலை வெளிப்படுத்தும் படமாக அமைந்தன.
இதையும் படிங்கள் : கிரிக்கெட் கிரவுண்ட்டில் வடக்கூரானை அடித்து உருளவைத்த நாகேஷ்… நகைச்சுவை லெஜண்ட்டின் மறுபக்கம்..
தமிழில் சூப்பர் டூப்பட் ஹிட்டான இந்த படம் மலையாளத்திலும் செம ஹிட் அடித்தது. விஜயின் கெரியரில் இன்னும் இந்த படத்தை முந்தி செல்லும் எந்த படமும் அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படி வெற்றியடைந்த காதலுக்கு மரியாதை படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
ஆனால் தமிழ், மலையாளத்தில் நல்ல வெற்றியடைந்த இந்த படம் ஹிந்தியில் அட்டர் ப்ளாப். சரியாக ஓடவில்லை. பெருந்தோல்வியை சந்தித்தது. ஹிந்தி ரீமேக்கில் நடித்த கதாநாயகி யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க. வேறு யாருமில்லை. நம்ம ஜோதிகா தான். மேலும் இந்த படத்தின் மூலம் தான் ஜோதிகா திரையுலகிற்கே அறிமுகமாயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.