நடிகர் கவுண்டமணி, கடந்த 1980 – 90களில் மிகவும் பிஸியான ஒரு காமெடி நடிகராக வலம் வந்தவர். தமிழ் சினிமாவில், கவுண்டமணி ஹீரோக்களுக்கு இணையாக மதிக்கப்படும் அளவுக்கு, அவரது இமேஜ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள் படத்தில் இருக்கும்படி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பார்த்துக்கொண்டனர். கவுண்டமணிக்கான காமெடி காட்சிகளும், அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டன. காமெடி நடிகராக இருந்தும், ஹீரோ அந்தஸ்தில் அந்த காலகட்டத்தில் வலம் வந்தவர் கவுண்டமணி.
ஹீரோவுக்கு இணையான சம்பளம்
உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படம், மெகா ஹிட் படமாக ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. 50 லட்சம் ரூபாய் என்ற லோ பட்ஜெட்டில் இயக்கப்பட்ட இந்த படத்தின் ஹீரோ சரத்குமாரின் சம்பளம் ரூ. 10 லட்சம், அதே சம்பளம்தான், கவுண்டமணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.அந்த அளவுக்கு கவுண்டமணிக்கு, முக்கியத்துவம் தரப்பட்டது.
ஒரு கட்டத்தில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த கவுண்டமணி, ஒரே நாளில் மூன்று, நான்கு படங்களுக்கு கால்ஷீட் தருவது வழக்கம். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என கால்ஷீட் நேரம் ஒதுக்கி தருவாராம். அதற்கேற்ப சம்பளத்தை பேசி, வாங்கி விடுவது வழக்கம். அந்த ஒரு மணி நேரத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் நடித்து முடித்துவிடுவது வழக்கம்.
மணிக்கணக்கில் கால்ஷீட்
ஆனால், அப்படி மணிக்கணக்கில் கால்ஷீட் தரும் பிஸி நடிகரான கவுண்டமணி, சில வேளைகளில், மற்றொரு நடிகரின் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். யாராவது இதுகுறித்து சொன்னால், வரட்டும்பா, அவனும் ஒரு வளர்ந்து வரும் நடிகன். அவனுக்காக காத்திருப்பதில் தப்பில்லை என்பார்.
காத்திருந்த கவுண்டமணி
அது யாரென்றால் கவுண்டமணியுடன் நடிக்கும் உதை வாங்கும் நடிகர் செந்தில்தான். சினிமாவில் கண்டபடி திட்டி, அடித்தாலும் செந்தில் மீது, கவுண்டமணிக்கு செந்தில் மீது தனியாக பாசம் நிறைய உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்திலை, முதல் ஆளாக சென்று பார்த்தது வேறு யாருமில்லை. நடிகர் கவுண்டமணிதான்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…