அடுத்தடுத்து விஜய் பட நாயகிகளை தட்டி தூக்கும் கவின்.... வைரலாகும் குட்டி தளபதி...!

by ராம் சுதன் |
vijay-kavin
X

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த நடிகர்கள் வரிசையில் தற்போது நடிகர் கவினும் இணைந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். பல போராட்டங்களுக்கு பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கவின்.

ஆனால் முதல் படம் கவினுக்கு அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் அந்நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையும் வென்றார். அதனை தொடர்ந்து வெளியே வந்த கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

kavin

தற்போது அடுத்தடுத்து மிகவும் பிசியாக படங்களில் நடித்து வரும் கவின் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள துணை நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தொடர்ந்து கவினின் பட நாயகிகள் குறித்த செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. அதாவது கவின் படங்களில் மட்டும் அடுத்தடுத்து விஜய் பட நாயகிகளாக நடித்து வருகிறார்கள். முன்னதாக கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தில் பிகில் பட நாயகி அமிர்தா நடித்திருந்தார்.

abrana dass

abrana dass

அதன் பின்னர் ஆகாஷ் வாணி வெப் தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நாயகி ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். தற்போது பீஸ்ட் நாயகி அபர்ணா தாஸ் உடன் கவின் இணைந்துள்ளார். இதெல்லாம் யதார்த்தமாக நடக்கிறதா அல்லது என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் பலரும் கவினை குட்டி தளபதி என அழைத்து வருகிறார்கள்.

Next Story