கவிஞர் வாலி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பாடல்களை எழுதியவர். எம்.ஜி.ஆரின் பல ஹிட் பாடல்களை எழுதியவர் வாலிதான். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தவர். பல ஆயிரம் பாடல்களை எழுதியவர். காதல், தத்துவம், எம்.ஜி.ஆரின் அரசியல் ஆசைகள் என அனைவற்றையும் பாடலில் கொண்டு வந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என பல தலைமுறையினருக்கும் பாடல்களை எழுதியவர். ஆனால், அவரையும் ஒருவர் பெண்டு கழட்டினார் என்றால் நம்புவீர்களா?. அவர்தான் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ்.
தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பாக்கியராஜ். இவர் படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்து வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாக்கியராஜே இசையமைப்பாளாரகவும் மாறினார். அப்போது, அவர் இசையமைத்து ஒரு படத்தில் பாடல் எழுத சென்ற போது ஏற்பட்ட அனுபவத்தை ஒரு மேடையில் கவிஞர் வாலி பகிர்ந்திருந்தார்.
ஒருமுறை பாக்கியராஜ் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘நான் என் படத்திற்கு இசையமைக்க போகிறேன். அதில் ஒரு பாடலை நீங்கள் எழுத வேண்டும்’ என அழைத்தார். இது என்னடா விபரீதமாக இருக்கிறது என நினைத்து அவரின் வீட்டிற்கு சென்றேன். 10 நாட்கள் சோறு, தண்ணி, உறக்கம், சரியாக இல்லாமால் ஆர்மோனிய பெட்டியை வாசித்து இசையை அவர் கற்று தேர்ந்திருந்தார். நல்ல ரசிகர். சிகரெட்டை ஊதி தள்ளுவார். அந்த புகையை நான் வாங்க வேண்டியிருக்கும்.
அவரிடம் எனக்கு பிடிக்காதது என்னவெனில் பல்லவியை நான் எழுதி கொடுத்தால் நான் தூங்கி விழுந்து, எழுந்து, அவரின் மனைவி பூர்ணிமா எனக்கு டிபன் கொடுத்து நான் சாப்பிட்டு முடித்த பின்னரும் அவர் அந்த பல்லவியையே பார்த்துக்கொண்டிருப்பார். ஒரு முடிவுக்கே வரமாட்டார். இனிமேல் அவர் இசையில் பாடல்களே எழுதக்கூடாது என நான் நினைக்கும்போது என்னிடம் ஒரு கவரை தருவார். அதில் ஐந்தாயிரம் பணம் இருக்கும். அப்புறம் நான் எப்படி எழுத மாட்டேன் என சொல்வேன்’ என நகைச்சுவையாக வாலி ஒரு மேடையில் பேசியிருந்தார்.
பாக்கியராஜ் இசையமைத்த 6 திரைப்படங்களில் வாலி பாட்டெழுதியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க இருந்த சூப்பர் ஸ்டாரின் தந்தை… இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!!
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…