Cinema History
நாகேஷை சங்கடப்பட வைத்த இயக்குனர்… ஆனா அவருக்குப் பாருங்க… என்ன ஒரு பெருந்தன்மை..!
தமிழ்த்திரை உலகில் பல சம்பவங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவில் உள்ளன. அப்படித்தான் நகைச்சுவை ஜாம்பவனான நாகேஷின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இதுபற்றி பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் பாடல் எழுதக்கூடிய வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. அது அவர் அறிமுகமான காலகட்டம். அப்போது அவர் துணையாக நண்பர் நாகேஷையும் உடன் அழைத்துச் சென்றார்.
அந்தப் படத்தை டைரக்ட் பண்ணியவர் ப.நீலகண்டன். அவரது அறைக்கு வாலியும், நாகேஷூம் வந்தனர். உங்க இரண்டு பேர்ல யார் வாலின்னு கேட்டார். நான் தான் வாலி. இவர் யாருன்னு கேட்டார். இவர் நாகேஷ். என்னுடைய நண்பன் என்றாராம் வாலி.
உடனே நாகேஷைப் பார்த்து நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. நீங்களா பாட்டு எழுதப் போறீங்கன்னு சொன்னாராம் டைரக்டர். அந்த சம்பவத்தின்போது நாகேஷின் மனசு எந்த அளவு சங்கடப்பட்டு இருக்கும்?
ஆனா அந்த சம்பவத்துக்குப் பின்னால் நாகேஷ் தமிழ் சினிமா உலகிலேயே தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த டைரக்டருடைய பல படங்களில் அவர் நடித்தும் இருந்தார்.
அவர் மட்டும் நான் ப.நீலகண்டனுடைய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தால் எம்ஜிஆர் நடித்த பல படங்களின் வாய்ப்பு ப.நீலகண்டனை விட்டு கைநழுவிப் போய் இருக்கும்.
ஆனா நாகேஷ் அதைச் செய்யவில்லை. அப்படிப்பட்ட பெருந்தன்மையான மனசுக்கு சொந்தக்காரர் தான் நாகேஷ் என்று கட்டுரை ஒன்றில் கவிஞர் வாலியே பதிவு செய்துள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆளைப்பார்த்து யாரையும் எடை போடக்கூடாது. அவரது குணம் எப்படி என்பது அவருடன் பழகிப் பார்த்தால் தான் தெரியும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
இதையும் படிங்க… ராமராஜன், மோகனுடைய படங்கள் எல்லாம் இப்ப எடுபடுமா…? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்..?
ப.நீலகண்டன் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர். இவர் சக்கரவர்த்தி திருமகள், நீதிக்குத் தலைவணங்கு, என் அண்ணன், மாட்டுக்கார வேலன், காவல்காரன், கண்ணன் என் காதலன், திருடாதே உள்பட பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எம்ஜிஆரின் 50வது படம் தான் நல்லவன் வாழ்வான்.