அட அந்த மாஸ் ஹிட் படத்தின் மூன்றாம் பாகமா? கவினை களமிறக்க திட்டம் தீட்டும் இயக்குனர்... வேற லெவல்…
Kavin: சீரியல் நடிகராக இருந்த கவினுக்கு டாடா படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் தொடர் லைன் அப்களால் கோலிவுட்டின் பிஸி நடிகராகி இருக்கிறார். தற்போது அவரை வைத்து ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சரவணன் மீனாட்சி, கனா காணும் காலம் கல்லூரியின் கதை போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். அதையெல்லாம் விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது. கிட்டத்தட்ட எல்லா வாரமும் வோட்டிங்கில் முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க: சத்தியராஜை ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆக்கிய வசனத்தை சொன்னவர் இவர்தானாம்!. அட இது தெரியாம போச்சே!..
இருந்தும், பணம் போதும் என்ற முடிவில் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. கிட்டத்தட்ட அவரின் கேரியருக்கே ஏறுமுகமாக அமைந்தது. இதன்பின்னர் அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது.
அடுத்ததாக இளன் டைரக்ஷனில் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து நெல்சன் தயாரிப்பில் ஒருபடமும், இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படமும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் தயாரிப்பில் கூட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இதையும் படிங்க: அந்த மூணு எழுத்து நடிகைக்கு 25 லட்சம்… ஒருநாளுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க… சர்ச்சையான பிரபலத்தின் பேச்சு…
இந்நிலையில் சுந்தர்.சியின் சூப்பர்ஹிட் திரைப்படமான கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே இரண்டு பாகங்களும் செமஹிட் என்பதால் இந்த பாகத்தில் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க சுந்தர்.சி முடிவெடுத்து இருக்கிறாராம். அரண்மனை 4 படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இப்படம் தொடங்கப்படலாம்.
வெற்றிமாறன் தயாரிப்பு படமும் கலகலப்பு மூன்றும் ஒரே நேரத்தில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. விமல் மற்றும் மிர்ச்சி சிவா காம்போவில் இரண்டு பாகமும் செம ரீச் கொடுக்க மூன்றாம் பாகம் கவின் வரவால் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:எங்கள காப்பாத்திக்க ஒரே வழி.. இப்படி இறங்கிட்டாங்களே? வீடியோவை போட்டு ஷாக் கொடுத்த நயன்