More
Categories: Cinema News latest news

கலெக்‌ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் கவின் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உருப்படியாக எந்த ஒரு படமும் இதுவரை வெளியாகவில்லை. அடுத்த வாரம் ரத்னம் மற்றும் அரண்மனை 4 வெளியாகிறது.

வரும் ஜூன் மாதம் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கை ஆரம்பித்து வைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதமே நான் வருகிறேன் என ரைசிங் ஸ்டார் கவின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: மம்மூட்டி ஸ்பாட்லயே அடிப்பாரு!.. அவர்கூட நடிக்கவே மாட்டேன்னு அடம்பிடிச்சேன்.. பாவா லட்சுமணன் பேட்டி!

கடந்த ஆண்டு டாடா படத்தின் மூலம் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டி அசத்தினார். இந்த ஆண்டு இதுவரை வெளியான பல படங்கள் ஐந்து கோடி ரூபாய் வசூலை ஈட்டவே தவித்து வருகின்றன. மலையாள திரைப்படங்கள் எல்லாமே 50 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக அடித்து நொறுக்கி வருகிறது.

இந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆவது அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிடுவார்களா என ரசிகர்கள் தற்போதைய எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா… தெலுங்கு பக்கம் சாய்ந்த ரஜினிகாந்த்.. பெத்த கோடி சம்பளமாம்!…

இந்நிலையில், மே 10 ஆம் தேதி கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீசாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 19-ஆம் தேதி நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிந்தவுடன் சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், சிவகார்த்திகேயனின் அமரன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் இதுக்கு மேல எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதலில் கவின் வந்து கலக்கப் போகிறார் என்கிற அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

கோட் படத்துக்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜாவின் தாறுமாறான பாடல்களை ரசிகர்கள் ஸ்டார் படத்தில் கேட்டு ரசிக்கலாம். அதிதி போஹங்கர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Published by
Saranya M

Recent Posts