அய்யயோ அடுத்த அஷ்வின் ஆகிடுவாரு போலயே? அப்படி மட்டும் பண்ணாதீங்க...கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்....!

by ராம் சுதன் |
kavin-aswin
X

கோலிவுட்டில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் கூட ஒரு கட்டத்திற்கு பிறகு தான் கெத்து காட்ட தொடங்கி இருப்பார்கள் போலும். ஆனால் தற்போது நடிக்க வரும் புதுமுக ஹீரோக்கள் ஒரு படத்தில் நடித்து விட்டாலே போதும் நாங்களும் மாஸ் ஹீரோ தான் என்னும் அளவிற்கு கெத்து காட்டவும் சீன் போடவும் தொடங்கி விடுகிறார்கள்.

அதேபோல் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து ஒரே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் அஷ்வின் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலேயே ஓவர் சீன் போட்டு முதல் படம் வெளியாகும் முன்பே தனது கெரியரை கெடுத்து கொண்டார். தற்போது தான் கொஞ்சம் அடக்கி வாசித்து வருகிறார்.

kavin

இந்நிலையில் அந்த வரிசையில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகர் இணைந்து விடுவார் போல. அவர் வேறு யாருமல்ல தொகுப்பாளர் சின்னத்திரை நடிகர் தற்போது வெள்ளித்திரை நடிகர் என அடுத்தடுத்து வளர்ந்து வரும் நடிகர் கவின் தான். இவர் சீரியலில் நடிக்கும் போதே மக்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி காரணமாக ஆகாஷ் வாணி என்ற வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் உடன் இணைந்து புதிய படத்தில் நாயகனாக கவின் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஊர்க்குருவி என்ற படத்திலும் கவின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

kavin-vignesh sivan

மேலும் அமிர்தா ஐயர், ரெபா ஜான், அபர்ணா தாஸ் என அடுத்தடுத்து விஜய் பட நாயகிகளுடன் ஜோடி நடித்து வருவதால் ரசிகர்கள் கவினை செல்லமாக குட்டி தளபதி என அழைத்து வருகிறார்கள். இப்படி உள்ள நிலையில், கவின் தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக இவர் வேண்டாம் அவர் வேண்டாம் இவரை போடுங்க அவரை போடுங்க என படக்குழுவினருக்கு தனது விருப்பம்போல் ஆர்டர் போட்டு வருகிறாராம்.

இதனை கேள்விபட்ட ரசிகர்கள் பல தடைகளை தாண்டி இப்போதான் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள் இப்படி உள்ள நிலையில் இதெல்லாம் வேண்டாம் தலைவா, பெயரை கெடுத்துக்காதீங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story