ஒரே நேரத்தில் தல தளபதி படம் ரிலீஸ்! அஜித் வெறியனா கவின் செஞ்ச வேலையை பாருங்க
Actor Kavin: கனா காணும் காலங்கள் இது கல்லூரியின் கதை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கவின். அந்த சீரியலில் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் கவின். இதற்கிடையில் ஒரு சில படங்களில் இரண்டாவது நாயகனாகவும் நடித்திருந்தார்.
இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற எண்ணம் கவினுக்குள் இருந்தது. அதன் காரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் நினைத்ததை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிய தொடங்கினர். அதிலும் சாண்டி மாஸ்டர் உடன் கவின் செய்த அட்ராசிட்டி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இதையும் படிங்க: புதுசா யோசிக்கவே தெரியாதா? இன்னும் அரைச்ச மாவையே அரைச்சி தலைப்பு வைக்கும் இயக்குனர்கள்!
இதற்கிடையில் லாஸ்லியா உடனான காதல் சாக்ஷி அகர்வாலுடனான மோதல் என பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கவின். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. லிஃப்ட் படம் மிகப்பெரிய வரவேற்பை கவினுக்கு பெற்று தந்தது. சின்ன பட்ஜெட்டில் இப்படி ஒரு கதைக்களம் எடுக்க முடியுமா என்ற ஒரு ஆச்சரியத்தை இந்த திரைப்படம் ஏற்படுத்தியது.
அதன் பிறகு டாடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்றார் கவின். இரண்டு படங்களின் தொடர் வெற்றி அவரை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. இப்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார் கவின். இந்த படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கவினின் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: பையா பட சமயத்துல கார்த்தி – தமன்னா காதலிச்சாங்களா?.. லிங்குசாமி என்னப்பா இப்படி சொல்லிட்டாரு!..
கவின் அஜித் ரசிகர் என்பதையும் தாண்டி அஜித் வெறியன் என்று தன்னை பெருமையாக கூறினார். ஒரு சமயம் திருச்சியில் அஜித் விஜயின் திருமலை, ஆஞ்சநேயா போன்ற படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனதாகவும் அடுத்தடுத்த திரையரங்குகளில் அஜித் விஜய் படங்கள் வெளியானதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதில் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து கவினும் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டதாக அந்த பேட்டியில் கூறினார். இந்த சண்டையை தடுக்க வந்த போலீசார்களை ஒட்டுமொத்த அஜித் விஜய் ரசிகர்களும் சேர்ந்து அடித்தார்களாம். அந்த அடியில் கவினுக்கும் சில அடிகள் விழுந்ததாக அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: ஆடியன்ஸ் பல்ஸ புடிச்சு நடிக்கிற நடிகர் இவர்தான்! சிம்பு சொன்ன அந்த ஹீரோ யார் தெரியுமா?