தரமான தல வெறியரை உள்ள இறக்கிட்டாங்களே.! இனி அடிச்சி பட்டைய கிளப்ப போகுது படம்.!

வலிமை படத்தை அடுத்து மீண்டும்அஜித், H.வினோத் இயக்கத்தில் தனது 61வது திரைப்படத்தில் நடிகக்க உள்ளர். அதற்கான செட் வேலைப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் அஜித் சாமானிய மனிதராக நடிக்க உள்ளாராம். வில்லத்தனம் உள்ள கதாபாத்திரமாக அஜித்தின் கதாபாத்திரம் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படியுங்களேன் - எல்லாரும் அவளோ ஆர்வமா இருக்கோம்.! இப்போ நீங்கதான் எங்க நம்பிக்கை.! ரசிகர்கள் ஏக்கம்.!
இப்படத்தில் அடுத்தடுத்து யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது. இப்படத்தில் கவின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். கவின் ஒரு பக்கா அஜித் ரசிகர் என்பதை விட அஜித் வெறியன் என்று அவரே கூறிவிடுவார். அந்தளவுக்கு அஜித்தை பிடிக்கும் என கூறுவார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் ஆரம்பித்த 4 மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனை தீபாவளிக்கு களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.