Connect with us

கவின் லாஸ்லியா பிரேக்கப்புக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? உளறி கொட்டிய பிக்பாஸ் பிரபலம்!

losliya

Cinema News

கவின் லாஸ்லியா பிரேக்கப்புக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? உளறி கொட்டிய பிக்பாஸ் பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த சீசன் என்றால் அது சீசன் 3 தான். காரணம் அந்த சீசனில் இருந்த போட்டியாளர்கள். அதிலும் குறிப்பாக வீ ஆர் த பாய்ஸ் டீம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

அந்த டீமில் இருந்த கவின் முகேன் தர்ஷன் சாண்டி மற்றும் லாஸ்லியா போன்றோர் அவர்களது பாடல் மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தனர். இதில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் வெளியே வந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

kavin

இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு பின்னால் நடந்த கதையை கவினின் நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான ராஜூ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “கவின் மற்றும் லாஸ்லியா இடையே சண்டை அதிகமாகி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விட்டார்கள்.

மேலும் உன்னால் தான் என் வாழ்க்கையே போச்சு என கூறிய லாஸ்லியா என்னுடைய அப்பா கண்ணீருக்கு முன்னாடி நீ எல்லாம் தூசுடா என்று கவினை கூறினார். அதேபோல் கவினும் உன்னால் தான் எங்க அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே விட மாட்டேங்கிறாங்க.

raju

அந்த அளவுக்கு அவமானமா போச்சு. என் நண்பன் என்னை அடிச்சதுக்கு பதில் உன்னை அடிச்சிருக்கனும் என இருவரும் மாறி மாறி சண்டையிட ஒருகட்டத்தில் கைகலப்பு வரை சண்டை சென்றுவிட்டது” என பிக்பாஸ் ராஜூ கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top