பல வருட காதலா?.. அப்போ பிரியா பவானி சங்கர், லாஸ்லியாலாம் டைம் பாஸா?.. விபூதி அடிக்க பார்த்த கவின்!..

சரவணண் மீனாட்சி சீரியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். அதன் பிறகு தற்போது தமிழில் லிப்ட், டாடா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களாக கவினுக்கு திருமணம் நடைபெறபோகிறது என்ற செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கவினுக்கு இந்த மாதம் 20ம் தேதி மோனிகா என்ற பெண்ணுடம் திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த பெண்ணை கவினுக்கு 30 வருடங்களாக தெரியும் என்று அவரே கூறியுள்ளார். இன்டாகிராமில் அவரின் புகைப்படத்திற்கு கீழ் மோனிகா கமெண்ட் செய்த போது, அதற்கு பதிலளித்த கவின், என் அம்மா அப்பாவிற்கு அடுத்தபடியாக என்னோடு 30 ஆண்டுகளாக இருப்பது நீ மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

monica

மேலும் இவர்கள் பல வருடங்களாக காதலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், முன்னதாக நடிகை பிரியா பவானி சங்கரை கவின் காதலித்ததாக வந்த செய்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை காதலித்தது எல்லாம் சும்மாவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதலித்தார் என்பது அனைவருக்குமே தெரியும்.

அந்த சமயத்தில் கவின், லாஸ்லியாவுக்கென்றே தனி ரசிகர்கள் இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்கள் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பல வருட காதல் என்றால், எப்படி நடுவில் பிரியா பவானி சங்கரையும், லாஸ்லியாவையும் காதலித்திருக்க முடியும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதுவும் லாஸ்லியா கவின் காதல் உலகமே அறிந்த ஒன்று. மேலும் இதுவரை எந்த பேட்டியிலும் கவின் காதலித்ததாக கூறவேஇல்லை என்றும் பலர் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க- அஜீத்தும் அப்படித்தான்!.. ஆனா விஜயை மட்டும் கார்னர் செய்யும் ரஜினி.. இது தப்பு தலைவரே!..

 

Related Articles

Next Story