விஜய் ஸ்டைலில் வெளியான கவினின் ஸ்டார் ட்ரைலர்… அடுத்த ஹிட் கன்பார்ம் தான் போல…

by Akhilan |
விஜய் ஸ்டைலில் வெளியான கவினின் ஸ்டார் ட்ரைலர்… அடுத்த ஹிட் கன்பார்ம் தான் போல…
X

Star: கவினின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஸ்டார். இப்படத்தினை பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கியுள்ளார். கவினுடன் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் ‘பில்லா’ ரேஞ்சுக்கு இறங்கிய நயன்தாரா! விக்கியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? இததான் எதிர்பார்த்தோம்

யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சாதாரண குடும்பத்தினை சேர்ந்த இளைஞன் எப்படி ஸ்டாராக மாறுகிறான் என்பது தான் படத்தின் கதை. முழுக்க முழுக்க நடிப்பை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் படம் என்பதால் இதில் கவின் நடிப்பின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தில், பல கட்ட வயதுகளில் கவின் நடித்து இருக்கிறார். அப்பாவாக வரும் லால் ட்ரைலரிலேயே பல இடங்களில் ரசிகர்களை கலங்கடிக்கிறார். நிறைய இடங்களில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களுடன் ஒன்று போகிறது.

இதையும் படிங்க: கோட் இரண்டாவது சிங்கிள் எப்போ தெரியுமா? விசில் போடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

இப்படம் வரும் மே 10ந் தேதி திரைக்கு வருகிறது. டாடா திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு சரியான படத்தினை தேர்வு செய்து கவின் நடித்து இருக்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. தொடர்ச்சியாக கவின் வசம் பல வாய்ப்புகள் இருப்பதால் கோலிவுட்டில் அடையாளப்படுத்தும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் டிரைலர்: https://www.youtube.com/watch?v=5QlTZEogGrE

Next Story