என்னய்யா நீ இப்டி மாறிட்ட.?! ரசிகைகளை சூடேற்றிய கவினின் புதிய போட்டோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்லாயிரக்கனாக ரசிகர்களை பெற்றுள்ளார் கவின். உண்மையில் அந்நிகழ்ச்சி மூலம், அதனை முழுதாக பயன்படுத்தி கொண்டவர் என்றால் அது கவின் மட்டுமே.

அதன் பிறகு சரியான கதையை தேர்வு செய்து லிப்ட் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்தார். அந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது ஆகாஷ்வாணி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பட புரமோஷன் வேலைகளில் கவின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த திரைப்படமும் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் மூலம் AHA எனும் தெலுங்கு OTT நிறுவனம் தமிழில் முதன் முதலாக காலெடுத்து வைக்கிறது.

இதையும் படியுங்களேன் - உங்க வாய் நீங்க உருட்டுங்க.! அஜித்தின் தீவிர ரசிகை நான்.! பாலிவுட் நடிகை பிதற்றல்.!

இப்பட நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் கவின் ரசிகைகள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. நீளமான முடியுடனும் தாடி மீசை முழுதாக எடுத்து ஆளே மாறி இருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ஆகாஷ்வாணி திரைப்படம் AHA OTT தளத்தில் இன்று இரவு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ்வாணி படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு பெற்றது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it