நல்ல பேரே கிடைக்கலையா? கவின் படங்களில் தொடரும் சேட்டை.. ஒரு படம் கூட மிஸ் ஆகலை!...

by Akhilan |   ( Updated:2024-05-04 11:01:23  )
நல்ல பேரே கிடைக்கலையா? கவின் படங்களில் தொடரும் சேட்டை.. ஒரு படம் கூட மிஸ் ஆகலை!...
X

Kavin: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் நடிகர் கவின் தொடர்ச்சியாக ஒவ்வொரு படங்களிலும் ஒரு விஷயத்தினை மிஸ் செய்யாமல் செய்து வந்திருப்பதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த பின்னர் விஜய் டிவியின் ஆடிஷனில் கலந்துகொண்டார் கவின். கனா காணும் காலங்கள் கல்லூரி சீரிஸில் கவினும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சியின் இரண்டாவது சீசனில் வேட்டையன் கேரக்டரில் நடித்து ஹிட்டடித்தார்.

இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

அதை தொடர்ந்து, கவின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். சில வாரங்கள் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ச்சியாக அவருக்கு அதிக வாக்குகளே கிடைத்தது. இதனால் கவின் தான் டைட்டிலை தட்டி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

இதை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். பட வாய்ப்பும் வந்தது. கவின் நடிப்பில் முதல் படமாக வெளிவந்தது லிப்ட். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, டாடா படத்தில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அடுத்து இவர் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!

தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. ஆனால் கவின் நடிக்கும் எல்லா படங்களின் டைட்டிலில் இதுவரை ஒன்றுக்கூட தமிழிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அவர் நடிப்பில் கிஸ் திரைப்படமும், பிளடி பெக்கர் திரைப்படமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

லிப்ட் தொடங்கி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் வரை எல்லா தலைப்புகளுமே ஆங்கிலத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது. இதை கவின் தெரிஞ்சு செஞ்சாரா இல்லை தானா அமைந்ததா தெரியவில்லை. ஆனால் எல்லா டைட்டிலுமே வித்தியாசமாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story