
latest news
கவினுக்கு அடித்த ஜாக்பாட்…. நயன்தாரா பட வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுவரை தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா முதல் முறையாக அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
நயன்தாரா என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் கூழாங்கல் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

Kavin
இந்நிலையில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு ஓவர் சீன் போடும் நடிகர்… இவர் அலப்பறை தாங்க முடியலடா சாமி…..
கவின் மற்றும் அம்ரிதா நடிப்பில் உருவான லிப்ட் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ரசிகர்கள் லிப்ட் படம் தியேட்டரில் வெளியாக வேண்டிய படம். அந்த அளவிற்கு சவுண்ட் எபெக்ட் மற்றும் காட்சிகள் பயங்கரமாக உள்ளது என கூறி வந்தனர்.
லிப்ட் படம் உண்மையில் நடிகர் கவினை லிப்ட் செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். இப்படம் தமிழ் சினிமாவில் கவினுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்க உள்ள தகவல் அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.