கவின் படத்தில் லேடி சூப்பர்ஸ்டாரா? அதுவும் படக்குழுவே முரட்டுத்தனமே இருக்கே!

Kavin: சின்னத்திரை நடிகராக இருந்த கவினுக்கு தற்போது கோலிவுட்டில் பெரிய அளவில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையின் அவருடைய அடுத்த படத்திற்கான மிகப்பெரிய அப்டேட்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் நிச்சயமாக முன்னணி நடிகர் அந்தஸ்தை கவின் பிடித்து விடுவார் என்றே பேசி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் சில சீரியல் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். அந்த சீரியல் கொடுத்த புகழை விட அவர் பங்கு பெற்ற பிக் பாஸ் சீசன் 3 அவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியேறிய கவின் சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் குவிந்தது.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் செய்ததை பாடமாக எடுத்து கொண்டேன்!.. கமல்ஹாசன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில் டாடா திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து கவின் கிஸ் திரைப்படம், நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் வெளியாகும் பிளடி பெக்கர் திரைப்படம், மாஸ்க் திரைப்படம் என வரிசையாக நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கவின். எல்லா திரைப்படங்களும் வித்தியாசமான கதையை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…
இப்படங்களைத் தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை விஷ்ணு இடவன் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே லியோ மற்றும் டாடா திரைப்படங்களில் பாடல் எழுதி இருக்கிறார். நா ரெடித்தான் பாடல்வரிகளை எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் இப்படத்தில் கவினுடன் நயன்தாராவும் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிக்க இருக்கிறார். ஆனால் இது கவினுக்கு ஜோடியாக இருக்குமா? இல்லை வேறு ஏதாவது முக்கியமான கதாபாத்திரமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே தன்னுடைய மார்க்கெட் சரி விடும் நயன் அதை காப்பாற்றிக்கொள்ள கண்டிப்பாக இந்த படத்தில் நடிப்பார் என்றே கூறப்படுகிறது.