சிவகார்த்திகேயன் ரூட்டை பிடிக்கும் கவின்!.. அடுத்த படத்துல அந்த ஆன்ட்டி ஹீரோயினுக்கு கொக்கி?..

இளம் நடிகைகளை ஜோடியாக்கி நடித்தால் பெரிய ஸ்டார் ஆக முடியாது என நினைத்த கவின் அடுத்ததாக தனது படத்திற்கு நடிகை நயன்தாராவை ஹீரோயின் ஆக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். அந்த படங்கள் எல்லாம் ஓடினாலும் பெரிய வசூலை வாரி குவிக்கவில்லை. உடனடியாக ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என வரிசையாக முன்னணி ஹீரோயின்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..

அதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவருக்கு பாக்ஸ் ஆபிஸில் பிரகாசமான எதிர்காலம் அமையத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் இளம் நடிகைகளை ஜோடியாக்கி படங்களில் நடித்து வருகிறார்.

அதே ரூட்டை தற்போது கவினும் கடைப்பிடித்து வருகிறார் என கூறுகின்றனர். பாடலாசிரியர் எடவன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள புதிய படத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த படத்தை லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிக்க போவதாகவும் கூறுகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…

நடிகை நயன்தாரா கவினுக்கு அக்காவாக நடிக்கப் போகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கன்னட நடிகர் யஷ்ஷுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது கவினுக்கு ஜோடியாகவா அல்லது அக்காவா? என்கிற கேள்வி தற்போது கிளம்பி இருக்கிறது.

நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தில் கவின் நடித்து வரும் நிலையில், அடுத்த அவர் நயன்தாரா நடிக்கும் படத்தில் நடிக்க போதாது கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?.. ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடியை வெளுத்து வாங்கிய பிரபலம்..

 

Related Articles

Next Story