எத்தனை படத்தை ஓகே பண்ணுவீங்க கவின்… லிஸ்ட்டில் இணைந்த ஜில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்…

Kavin: டாடா படத்தின் வெற்றியால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையில் வேட்டையன் என்னும் கேரக்டரில் பிரபலமாக இருந்தவர் கவின். தொடர்ச்சியாக அவருக்கு தமிழ் பிக்பாஸ் சீசனில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது சீசனில் மிகப்பெரிய பிரபலமடைந்த கவின் டைட்டில் அடிக்கும் நிலையில் இருந்தார். ஆனால் திடீரென பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கவின் வெளியேறிவிட்டார்.

இதையும் படிங்க: அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகர்கள்!.. சுள்ளான இருந்தும் சுளுக்கெடுத்த தனுஷ்!…

இதை தொடர்ந்து, கவினுக்கு டாடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ச்சியாக கவினின் கேரியர் உச்சத்தில் அடைந்தது. சமீபத்தில் கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் ரிலீஸானது. அப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் கவினின் சம்பளமும் 8 கோடியை நெருங்கி இருக்கிறது. கவினின் லைன் அப்பிலும் தொடர்ச்சியாக படங்கள் வரிசையில் குவிந்து இருக்கிறது. கிஸ், பிளடி பெக்கர், கவின்08 என படங்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதுவே பெரிய படங்கள் என்பதால் கவின் கோலிவுட்டில் வளர்ந்து கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: பாரால் முதல் நாளே பெரிய பிரச்னை… பழனிசாமியால் மூச்சுவிட்ட பாக்கியா.. அப்போ அவ்வளவு தானா?

இந்நிலையில் கவின் அடுத்த புராஜெட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் கிருஷ்ணா இயக்க இருக்கும் இப்படம் 2006ம் ஆண்டில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தின் தொடர்ச்சியாக அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்தில் தான் கவின் நடிக்க இருக்கிறார்.

சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தினை இரண்டாம் பாகமாக எடுத்தால் அது எந்த அளவு வரவேற்பை பெறும். ரசிகர்கள் ஏத்துக்கொள்வார்களா எனவும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

 

Related Articles

Next Story